Published : 10 Feb 2015 06:54 PM
Last Updated : 10 Feb 2015 06:54 PM

தமிழகத்தில் இரட்டை ஆட்சி : பிரச்சாரத்தில் ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடந்து வருகிறது என்று ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் 13-ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் ஸ்டாலின் இரண்டாவது நாளாக சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

திருச்சி கம்பரசம் பேட்டையில் ஸ்டாலின் பேசுகையில், ''

வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு தந்தது திமுக. விவசாயிகளின் கடன்களையும் திமுக ஆட்சியில் இருந்தபோது ரத்து செய்தது.

அதிமுக ஆட்சியில் அந்தக் கட்சியினருக்கு மட்டுமே இலவச ஆடு, மாடுகள் வழங்கப்பட்டன. இந்த ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முடங்கிவிட்டன. விலைவாசியும் உயர்ந்துவிட்டது.

2016ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு சாட்சியாக இடைத்தேர்தல் இருக்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களுக்கு புத்தி புகட்ட, பாடம் புகட்ட இடைத்தேர்தல் பயன்பட வேண்டும்.

தமிழகத்தில் டபுள் ஆட்சி நடந்து வருகிறது. பினாமி முதல்வருடன் சேர்ந்த்து தமிழகத்தில் இரண்டு முதல்வர்கள் உள்ளனர். காவல்துறை தலைவர்களும் 2 பேர், தலைமைச் செயலரும் 2பேர் உள்ளனர்.'' என ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x