ரூ.300 கோடி மதிப்பில் கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ - அக்.16-ல் முதல்வர் விஜய் திறக்கிறார்

ரூ.300 கோடி மதிப்பில் கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ - அக்.16-ல் முதல்வர் விஜய் திறக்கிறார்
Updated on: 
1 min read

கோவை: கோவை காந்​திபுரத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள ‘பெரி​யார் அறி​வுல​கம்’ வளாகத்தை முதல்​வர் விஜய் வரும் 16-ம் தேதி திறந்து வைக்​கி​றார்.

தமிழக பொதுப்​பணித் துறை​யின் சார்​பில், கோவை காந்​திபுரம் நஞ்​சப்பா சாலை​யில் மத்​திய பேருந்து நிலை​யம் எதிரே, சிறைத்​துறைக்கு சொந்​த​மான இடத்​தில், 6.98 ஏக்​கர் பரப்​பள​வில், 1 லட்​சத்து 98 ஆயிரம் சதுரடி​யில் தரைத்​தளம் மற்​றும் 7 தளங்​களு​டன் ரூ.300 கோடி மதிப்​பில் ‘பெரி​யார் அறி​வுல​கம்’ எனப்​படும் ‘பெரி​யார் நூல​கம் மற்​றும் அறி​வியல் மையம்’ கட்​டப்​பட்​டுள்​ளது.

கடந்த 2024-ல் தொடங்​கப்​பட்ட இப்​பணி தற்​போது நிறைவடைந்​துள்​ளது. திட்ட மதிப்​பில், ரூ.245 கோடி கட்​டு​மானப் பணிக்​கும், ரூ.50 கோடி புத்​தகங்​கள் வாங்​கு​வதற்​கும், ரூ.5 கோடி இ-புத்​தகங்​களுக்​கும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வளாகம் ‘ஏ’ மற்​றும் ‘பி’ என இரு பிளாக்​கு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. தரைத்​தளத்​தில் மாற்​றுத்​திற​னாளி​களுக்​கான நூல​கம், 350 பேர் அமரக்​கூடிய ஆடிட்​டோரி​யம், அறி​வியல் உபகரணங்​களு​டன் கூடிய அறி​வியல் மையம், விண்​வெளியை கண்​டு​களிக்​கும் வகை​யில் கோளரங்​கம், ஸ்பேஸ் லிஃப்ட் ஆகியவை அமைக்​கப்​பட்​டுள்​ளன.

முதல் தளத்​தில் வரவேற்​பறை, அறி​வியல் மையம், 2-வது தளத்​தில் சொந்​த​மாக புத்​தகம் எடுத்து வருபவர்​கள் படிக்க குறிப்​பிட்ட இடமும், சிறு​வர்​களுக்​கான நூல​க​மும் அமைக்​கப்​பட்​டுள்​ளது. 3-ம் தளத்​தில் போட்​டித்​தேர்வு பயிற்சி மையம், நிர்​வாகப் பிரி​வு, நூல​கம் ஆகியவை அமைக்​கப்​பட்​டுள்​ளன.

4-ம் தளத்​தில் வரலாற்று புத்​தகங்​கள் பிரி​வு, தமிழ் நூல்​கள் பிரி​வு, பருவ இதழ்​கள், 5-வது தளத்​தில் ஆங்​கில நூல்​கள் பிரி​வு, ஸ்டார்ப்​அப் நிறு​வனங்​களுக்​கான இன்​குபேஷன் சென்​டர், 6-வது தளத்​தில் ஆங்​கிலம் கற்​கும் பிரி​வு, இன்​குபேஷன் சென்​டர், 7-வது தளத்​தில் அறி​வியல் மையம் மற்​றும் டிஜிட்​டல் நூல​கம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

பெரி​யார் அறி​வுல​கத்​தின் திறப்பு விழா வரும் 16-ம் தேதி நடை​பெறுகிறது. முதல்​வர் விஜய் கலந்து கொண்டு இம்​மை​யத்தை திறந்து வைக்​கி​றார். அமைச்​சர்​கள், அதி​காரி​கள் உள்​ளிட்​டோரும் கலந்து கொள்​கின்​ற​னர்.

இதுதொடர்​பாக மாவட்ட நிர்​வாகத்​தினர் கூறும்​போது, “வரும் 16-ம் தேதி கோவை வரும் முதல்​வர் விஜய், நஞ்​சப்பா சாலை​யி்ல் கட்​டப்​பட்​டுள்ள பெரி​யார் அறி​வுல​கம் எனப்​படும் நூல​கம் மற்​றும் அறி​வியல் மையத்தை திறந்து வைக்​கி​றார். மற்ற நிகழ்​வு​கள் இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்​லை”என்​ற​னர். கோவை காவல் ​துறை அதி​காரி​கள் கூறும்​போது, “முதல்​வர் வரு​கை​யையொட்​டி, தேவை​யான பாது​காப்பு ஏற்​பாடு​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன” என்​றனர்.

ரூ.300 கோடி மதிப்பில் கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ - அக்.16-ல் முதல்வர் விஜய் திறக்கிறார்
டெல்லி பேரணி: எஸ்ஐஆர் முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in