Published : 31 Jan 2015 10:06 AM
Last Updated : 31 Jan 2015 10:06 AM

மது ஒழிப்புக்காக தடையை மீறி சென்னையில் உண்ணாவிரதம்: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கைது

மதுவை ஒழிக்க சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றா ததைக் கண்டித்து, தடையை மீறி உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்ற காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவையின் தலைவருமான குமரி அனந்தன் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், வடசென்னை மாவட்ட தலைவர் ஆர்.மனோ, மத்திய மாவட்ட தலைவர் என்.ரங்கபாஷ்யம் உள் ளிட்ட 120 பேர் நேற்று, மதுவை எதிர்த்து சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து, தடையை மீறி மாநக ராட்சி வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றனர்.

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து செய்தனர். பின்னர், அங்குள்ள சென்னை மாநகராட்சியின் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு குமரி அனந்தன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது:

1917-ம் ஆண்டு வெள்ளையர்கள் ஆட்சி செய்தபோது, சேலம் நகர சபைத் தலைவராக பதவி வகித்த ராஜாஜி, தன்னுடைய சபை எல்லைக்குள் மது கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றி வெற்றிகர மாக செயல்படுத்தினார். வெள்ளை யர் ஆட்சிக் காலத்திலேயே மது ஒழிப்பை வெற்றிகரமாக செயல்படுத்தியபோது, நம்மவர்கள் ஆட்சி செய்கின்ற சென்னை மாநகராட்சி எல்லைக்குள் மது விற்பனை செய்யக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றக்கோரி மனு கொடுத்தோம். ஆனால், அவர்கள் தீர்மானம் நிறைவேற்றவில்லை.

இதனைக் கண்டித்து, தடையை மீறி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம். அடுத்த கட்டமாக, தமிழகத்தில் உள்ள பிற நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு களில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் மேற் கொள்ள உள்ளோம்.

இவ்வாறு குமரி அனந்தன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x