Last Updated : 31 Jan, 2015 09:52 AM

 

Published : 31 Jan 2015 09:52 AM
Last Updated : 31 Jan 2015 09:52 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் பயஸ் - ஹிங்கிஸ் ஜோடி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் விளையாட இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங் கிஸ் ஜோடி தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் அரையிறுதி ஆட்டத் தில் பயஸ் ஹிங்கிஸ் ஜோடி, சீன தைபேயின் சூ-வி-ஹேசி, உருகுவேயின் பாப்லோ குயுவாஸ் இணையை எதிர்கொண்டது. இதில் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் பயஸ் ஹிங்கிஸ் ஜோடி வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

சானியா - சோரஸ் தோல்வி

கலப்பு இரட்டையர் பிரிவின் மற்றொரு அரை யிறுதியில் இந்தியாவின் சானியா மிர்ஷா பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடி பிரான் ஸின் கிறிஸ்டினா மிலடினோவிச், கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் கிறிஸ்டினா நெஸ்டர் ஜோடி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளை யாடியது. இதனால் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை வெற்றி பெற்றது.

அடுத்த செட்டிலும் அந்த ஜோடியின் ஆதிக்கம் தொடர்ந் தது. சானியா ஜோடி கடுமையாக போராடியபோதிலும் அந்த செட்டை கைப்பற்ற முடியவில்லை. 6-2 (10/8) என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கிறிஸ்டினா நெஸ்டர் ஜோடி வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

ஜோகோவிச் - முர்ரே

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஸ்காட் லாந்தின் ஆன்டி முர்ரே ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். இந்த போட்டி நாளை நடைபெற வுள்ளது.

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை 7-6 (7-1), 3-6, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் கடுமையான போராட்டத் துக்குப் பிறகு வென்றார்.

தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ஸ்காட்லாந்தின் ஆன்டி முர்ரே, தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை மற்றொரு அரையிறுதியில் எதிர்கொண்டார். இதில் 6-7 (6-8) என்ற செட் கணக்கில் முர்ரே முதல் செட்டை இழந்தார்.

எனினும் அடுத்து விளையாடிய மூன்று செட்களையும் 6-0 6-3 7-5 என்ற கணக்கில் முர்ரே வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x