சென்னையில் 29.14 லட்சம் வாக்காளர்கள் | நவ.21, 22, 29-ல் சிறப்பு முகாம்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.எஸ்.சமீரன் ரிப்பன் மாளிகையில் வெளியிட்டார். உடன் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி கே.கர்பகம், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் வழக்கறிஞர் நவாஸ் உள்ளிட்டோர்.

சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.எஸ்.சமீரன் ரிப்பன் மாளிகையில் வெளியிட்டார். உடன் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி கே.கர்பகம், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் வழக்கறிஞர் நவாஸ் உள்ளிட்டோர்.

படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on: 
1 min read

சென்னை: மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் சென்னையில் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி சென்னையில் மொத்தம் 29.14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவ.21, 22, 29 தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

சென்னை தேர்தல் மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அடுத்த ஆண்டு ஜன.1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல், சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.எஸ்.சமீரன் ரிப்பன் மாளிகையில் இன்று வெளியிட்டார்.

இதன்படி சென்னை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 14,04,968 பேர், பெண் வாக்காளர்கள் 15,09,040 பேர், இதர வாக்காளர்கள் 900 பேர் என மொத்தம் 29,14,908 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 4,079-லிருந்து 4,070 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஏப்.1-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 28,93,505 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 21,403 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியலை வெளியிட்டபோது, எஸ்ஐஆரை ரத்து செய்யாமல், அதன் தொடர்ச்சியாக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். அடுத்த ஆண்டு ஜன.1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச.11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சென்னை தேர்தல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் வரும் நவ.21, 22, 29 ஆகிய நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது.

எனவே இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுடைய வாக்காளர்கள், வரும் ஜன.1-ம் தேதி 18 வயது நிறைவடைவோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஜன.4-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.எஸ்.சமீரன் ரிப்பன் மாளிகையில் வெளியிட்டார். உடன் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி கே.கர்பகம், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் வழக்கறிஞர் நவாஸ் உள்ளிட்டோர். </p></div>
“ஒரு வாரத்தில் ‘சண்டியர்’ தலைப்பை மாற்றாவிட்டால்...” - கமலுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

X