Published : 20 Jan 2015 06:27 PM
Last Updated : 20 Jan 2015 06:27 PM

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடிக்கும்: அமித் ஷா

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பாஜக ஆட்சி அமைக்கும் என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் பர்த்வானில் அவர் இது குறித்து இன்று பேசியதாவது:

மக்களை சித்ரவதை செய்வதன் மூலம் ஜனநாயகத்தில் வெற்றி ஈட்ட முடியாது. மாநிலம் முழுதும் வன்முறை, ஊழல், மோசடி, மற்றும் தேசவிரோத செயல்பாடுகள் என்று திரிணமூல் கட்சி தலைவிரித்தாடுகிறது.

கம்யூனிஸ்ட்கள் வளர்ச்சிப்பாதை நோக்கிச் செல்லவில்லை. திறமையான ஆட்சியைக் கொடுப்போம் என்று கூறியே மம்தா நாற்காலியில் அமர்ந்தார். ஆனால் நிர்வாகம் கம்யூனிஸ்ட்களை விடவும் மோசமாகப் போயுள்ளது.

வங்காளத்திற்கு தற்போது தேவை நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தேவை. அவர்தான் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வளர்ச்சிக்கு வழிகாட்டுவார்.

டெல்லி, பிஹார், பிறகு மேற்கு வங்கம், என்று பாஜக அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும்.” என்றார் அமித் ஷா.

அவருடன் இருந்த மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் ராகுல் சின்ஹா, பாஜக தேசியச் செயலர் சித்தார்த்நாத் சிங் ஆகியோரும் 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை பாஜக அகற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x