Last Updated : 24 Jan, 2015 10:15 AM

 

Published : 24 Jan 2015 10:15 AM
Last Updated : 24 Jan 2015 10:15 AM

7 ஆயிரம் கார்களில் மருத்துவர்கள்: சென்னையில் 5 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது

நந்தம்பாக்கம் வர்த்தக மையத் தில் நடக்கும் மகப்பேறு மருத்துவர் கள் மாநாட்டில் பங்கேற்க 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களில் 9 ஆயிரம் மருத்துவர்கள் ஒரே நேரத்தில் வந்ததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சென்னை ஸ்தம்பித்தது.

இந்திய மகப்பேறு மருத்துவர்களின் 5 நாள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த 21-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. முதல் 2 நாட்கள் பயிற்சிப் பட்டறை, கருத்தரங்கம் போன்றவை நடந்தன. முறைப்படியான தொடங்க விழா 3-ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், இலங்கை உட்பட பல நாடுகளில் இருந்து சுமார் 9 ஆயிரம் மருத்துவர்கள் மாநாட்டில் பங்கேற்க முன் கூட்டியே சென்னைக்கு வந்திருந் தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள், ஹோட்டல் களில் தங்கியிருந்த மருத்துவர்கள், மாநாட்டில் பங்கேற்க கார்களில் நேற்று காலை புறப்பட்டனர்.

பொதுவாகவே, சென்னையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். பல இடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடப்பதால் தினமும் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் இருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களில் 9 ஆயிரம் மருத்துவர்கள் பூந்தமல்லி சாலையில் உள்ள வர்த்தக மையத்தை நோக்கி ஒரே நேரத்தில் சென்றதால், சென்னையே ஸ்தம்பித்தது.

குறிப்பாக சைதாப்பேட்டை, கிண்டி, போரூர், பூந்தமல்லி, மீனம் பாக்கம், அடையாறு, வேளச்சேரி யில் இருந்து நந்தம்பாக்கம் செல்லும் சாலைகளில் பல கி.மீ. தூரத்துக்கு ஆயிரக்கணக்கான கார்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெரிசல் பகல் 1 மணி வரை நீடித்தது. அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். பல்வேறு இடங்களில் ஆம்புலன்ஸ்களும் விரைந்து செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கின.

வாகன நெரிசல் குறித்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் கூறியதாவது:

மருத்துவ மாநாட்டில் பங்கேற்க 7 ஆயிரம் கார்களில் மருத்துவர்கள் வந்தனர். மேலும், தை மாதத்தின் முதல் முகூர்த்த நாளும் சேர்ந்துகொண்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. துணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரடியாகக் களத்துக்கு சென்று போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டேன். இன்னும் 2 நாட்கள் மாநாடு நடக்க உள்ளது. இந்த நாட்களில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நெரிசலை குறைப்பது எப்படி?

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் கீதகிருஷ்ணன் கூறியதாவது:

வளர்ந்த நாடுகளைப் போல, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தமிழகத்திலும் நுண் ணறிவு முறையைப் பயன்படுத்த வேண்டும். வாகனங்கள் ஒரே இடத் தில் குவிவதைத் தடுக்கவேண்டும். அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளில் தனி கால்சென்டர் ஏற்படுத்தி, அதற்கான எண்ணை அறிவிக்க வேண்டும். அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் எங்கு வாகன நெரிசல் அதிகம் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, அப்பகுதியை மக்கள் தவிர்ப்பார்கள். அந்த எண்ணில் இருந்து எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல்களை அறியும் வசதி செய்யப்பட வேண்டும். இதுதவிர, திடீரென விபத்து ஏற்பட்டாலோ, மாநாடு, விழாக்கள் நடந்தாலோ அதுபற்றி முன்கூட்டியே சாலையின் நுழைவாயில் மற்றும் முக்கிய பகுதிகளில் வேன்கள் நிறுத்தப்பட்டு அதில் டிஜிட்டல் முறையில் தகவல்களை திரையிடலாம். அப்படி செய்தால், மக்கள் அதற்கேற்ப தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x