Published : 20 Jan 2015 14:01 pm

Updated : 20 Jan 2015 14:01 pm

 

Published : 20 Jan 2015 02:01 PM
Last Updated : 20 Jan 2015 02:01 PM

திரையரங்குகள் அதிகரிப்பு: மகிழ்ச்சியில் டார்லிங் படக்குழு

படம் வெளியான 2-ம் நாள் 25 திரையரங்குகளும், தற்போது மேலும் பல திரையரங்குகளிலும் காட்சிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதால், 'டார்லிங்' படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.

சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கில்ராணி, பால சரவணன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் படம் 'டார்லிங்'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் முதல் படம் 'டார்லிங்' என்பது குறிப்பிடத்தக்கது.

'ஐ', 'ஆம்பள' ஆகிய படங்களுக்கு அதிகமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருந்ததால், குறைவான திரையரங்குகளில் வெளியானது 'டார்லிங்'.

ஆனால், காமெடி கலந்த பேய்ப் படம் என்பதால் மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், படக்குழுவினர் 'நான் கடவுள்' ராஜேந்திரனின் காமெடியை டி.வி. விளம்பரங்களில் வெளியிட்டு இருப்பது, அந்தப் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் என்கிறது திரையுலக வட்டாரம்.

படம் வெளியான 2-ம் நாளில் 25 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு இருப்பதால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.



டார்லிங்ஜி.வி.பிரகாஷ்ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்சாம் ஆண்டன்

You May Like

More From This Category

More From this Author