Published : 24 Jan 2015 10:11 AM
Last Updated : 24 Jan 2015 10:11 AM

சென்னை பல்கலையில் ரூ.100 கோடியில் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்: துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பேட்டி

சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடி செலவில் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் விரைவில் தொடங்கப்படும் என்று துணைவேந்தர் ஆர்.தாண்டவன் கூறினார்.

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் துணைவேந்தர் ஆர்.தாண்டவன் தலைமையில் பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடந்தது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம், மாலை 6 மணி வரை நீடித்தது. கூட்டம் முடிந்த பிறகு துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னை பல்கலைக்கழகத் தில் ரூ.100 கோடி செலவில் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்து முதல்கட்டமாக ரூ.70 கோடி வழங்கியது. நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை தொடங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்தும் வகை யில் இத்துறைக்கு 2 பேராசிரியர் கள், ஒரு இணை பேராசிரியர், 7 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் நியமனத்துக்கு சிண்டிகேட் ஒப்புதல் வழங்கியது.

இதைத் தொடர்ந்து, நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத் துக்கான இறுதிக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஏற்கெனவே பல்கலைக்கழகத் தின் கிண்டி வளாகத்தில் இதற்காக ரூ.25 கோடி செலவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.70 கோடி நிதியை பயன்படுத்தியதற்கான சான்றிதழை வழங்கியதும், மத்திய அரசு எஞ்சிய ரூ.30 கோடியை அளிக்கும். இந்த மையத்தில், நானோ மெட்டீரியல், நானோ மருத்துவம், நானோ இயற்பியல், நானோ வேதியியல், நானோ வாழ்வியல் துறைகள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெறும்.

மேலும் வணிகவியல், கம்பெனி நிர்வாகம், உயிரி-தொழில்நுட்பம் உட்பட 10 துறை களில் பாடத்திட்டத்தை மேம் படுத்துவதற்கும், தற்போதைய பதிவாளருக்கு 2 ஆண்டுகள் பணிநீட்டிப்பு வழங்கவும், ரூ.2 கோடி செலவில் மின்-ஆளுமை திட்டத்தைத் செயல்படுத்தவும் சிண்டிகேட் ஒப்புதல் வழங்கி யுள்ளது. இவ்வாறு துணைவேந்தர் ஆர்.தாண்டவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x