Last Updated : 02 Jan, 2015 08:59 AM

 

Published : 02 Jan 2015 08:59 AM
Last Updated : 02 Jan 2015 08:59 AM

சென்னையில் புத்தாண்டு இரவில் 102 விபத்துகள், 4 பேர் பலி: கோயிலில் ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் கொலை

சென்னையில் புத்தாண்டுக் கொண் டாட்டத்தில் நடந்த விபத்துகளில் 4 பேர் பலியாயினர். அதிக வேகத்தில் பைக்குகளை ஓட்டிச் சென்ற 200 இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி காயமடைந்தனர்.

சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு கோலாகலமாகக் கொண் டாடப்பட்டது. மெரினா, பெசன்ட் நகர், பாலவாக்கம் கடற்கரைகள், கடற்கரைச் சாலைகள், அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் கூடி கேக் வெட்டி கொண்டாடினர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மெரினாவில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் குறைவாகவே இருந் தது. கோயில்கள், தேவாலயங் களில் அதிக கூட்டம் காணப்பட்டது.

விபத்துகளில் 2 பேர் பலி

சென்னை கீழ்ப்பாக்கம் இ.எஸ்.ஐ. குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமி (70). புத்தாண்டு இரவில் குடும்பத் துடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் சென்று கொண்டிருந்தார். வேகமாக வந்த ஒரு ஆட்டோ அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த லட்சுமியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கீழ்ப்பாக்கம் தலைமைச் செயலக காலனி சாமிதாசபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (35). இவரது நண்பர் ஸ்ரீதர். இருவரும் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக் காக ஒரே பைக்கில் கீழ்ப்பாக்கம் புதிய ஆவடி சாலையில் சென்றனர். எதிரே வேகமாக வந்த ஒரு ஆட்டோ அவர்களது பைக் மீது மோதியது. பைக்கில் இருந்து ஸ்ரீதர், ராஜேஷ் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் ராஜேஷ் உயிரிழந் தார். ஸ்ரீதருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த 2 விபத்துகள் குறித்தும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ஷேக்பாபு விசாரித்து வருகிறார்.

மாடியில் இருந்து விழுந்து ஓட்டுநர், நடத்துனர் பலி

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்தவர் கணேசன்(50). சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக இருந்தார். கே.கே.நகரில் 3 மாடிகள் கொண்ட தனியார் விடுதியின் 2-வது மாடியில் தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, மாடியில் இருந்து தவறி விழுந்தார். தலையில் அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.கே நகர் போலீஸார் விசாரிக் கின்றனர்.

மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஞானசெல்வம் (48). சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்தின் எம்.கே.பி.நகர் பணிமனையில் ஓட்டுநராக இருந்தார். பணிமனை அறையில் தங்கியிருந்தார்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முடித்த ஞானசெல்வம் நேற்று அதிகாலை 3 மணி அளவில், தான் தங்கியிருந்த 2-வது மாடியின் அறையில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்தவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து எம்.கே.பி. நகர் காவல் ஆய்வாளர் பாலமுரளி விசாரிக்கிறார்.

200 இளைஞர்கள் காயம்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக லட்சக் கணக்கான மக்கள் கடற்கரைகளில் குவிந்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பைக்குகளில் கடற்கரைக்கு வந்திருந்தனர்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பிறகு இளைஞர்கள் அதிவேகமாக பைக்குகளில் சென்றனர். அப்போது சாலையில் நடந்த பல்வேறு விபத்துகளில் சிக்கி 200-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் காயமடைந்தனர். 102 இடங் களில் விபத்துக்கள் நடந்துள்ளன.

இவர்களில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 57 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 58 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் 37 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 12 பேர் சிகிச்சை பெற்றனர். தனியார் மருத்துவமனைகளில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

மோதலில் மாணவர் உயிரிழப்பு

சென்னை அடுத்த மாங்காடு அண்ணா தெருவை சேர்ந்தவர் ரூபன் (18). புத்தாண்டை முன்னிட்டு தன் நண்பர் விஐய்யுடன் அருகே உள்ள புற்றுக்கோயிலுக்கு சென்றார்.

அப்போது பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், கருணாகரன் ஆகியோருக்கும் ரூபனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதலில் கீழே விழுந்த ரூபனின் தலையில் பலமாக அடிபட்டது.

மயக்கம் அடைந்த அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவர் பிறகு உயிரிழந்தார். குன்றத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுரேஷ், கருணாகரனை கைது செய்தனர்.

விபத்தில்ல மெரினா

சென்னை மெரினாவில் புத்தனடுக் கொண்டாட்டத்தின்போது கடற்கரைச் சாலையில் பைக்கில் வேகமாகச் செல்வது, ஒற்றை சக்கரத்தில் ஓட்டுவது, வீலிங் போன்ற சாகசங்களில் பலர் ஈடுபடுவார்கள். இதுவே விபத்துகளுக்கு காரணமாக இருக்கும். இதை தடுக்க போக்குவரத்து போலீஸார் பல நடவடிக்கைகளை எடுத்ததால் மெரினா சாலையில் விபத்துகளே நடக்கவில்லை.

சென்னை அனைத்து சிக்னல்களிலும் போலீஸார் நின்று வாகன சோதனை செய்ததால் பெரும்பாலான விபத்துகள் தவிர்க்கப்பட்டன. சென்னை நகர் முழுவதும் 300 இடங்களில் போலீஸார் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் 13 விபத்துகள், அண்ணாசலை மற்று பூந்தமல்லி சாலையில் 6 விபத்துகள், ராஜீவ்காந்தி சாலையில் 4 விபத்துகள் நடந்துள்ளன. போலீஸாரின் தீவிர கண்காணிபால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. சிறிய சாலைகளில் 73 விபத்துகள் நடந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x