Published : 29 Jan 2015 10:18 am

Updated : 29 Jan 2015 12:29 pm

 

Published : 29 Jan 2015 10:18 AM
Last Updated : 29 Jan 2015 12:29 PM

காமெடி டைம்ஸ்: வேலைக்காக மின்னஞ்சல் அனுப்புவோர் கவனிக்க

உலகம் தோன்றிய காலத்திலிருந்தே தொடர்கின்ற ஒரு பிரச்சினை வேலையில்லாத் திண்டாட்டம். கற்காலத்திலும் இது இருந்திருக்கிறது, ஆனால் அப்போது அரசியல் முதிர்ச்சி ஏற்படாததால் அதிகம் பேசப்படவில்லை, பதிவு செய்யப்படவில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது!

வேலைக்கு மனுபோடுவது என்பது ஒரு காலத்தில் ‘கடமை’யாகி, சில ஆண்டு களுக்குப் பிறகு ‘அன்றாட வேலை’யாகி, சமீபத்தில் ‘பொழுதுபோக்காக’ மாறியிருக் கிறது. ஆனால் வேலை தேடுவோரும் அவர்களுடைய பெற்றோரும் தங்களு டைய வாரிசுக்கு 32 சாமுத்ரிகா லட்சணங்களும் இருந்தும், எந்தக் கல்நெஞ்சனும் மனம் இரங்கி வேலை தரவில்லையே என்று நொந்துகொள்கிறார்கள்.

“என்னை வேலைக்குச் சேர்த்தால் தங்களுடைய வேலையே போய்விடும் என்பதால்தான், ஏற்கெனவே (எப்படியோ) வேலையில் சேர்ந்தவர்கள் எங்களுடைய மனுக்களை உரியவர்களின் பார்வைக்குக் கொண்டுசெல் லாமல் தவிர்த்துவிடுகிறார் கள்” என்று ஊர் மந்தையில் அலட்டிக்கொள்ளும் வேலை கிடைக்காத இளைஞர்களே..! உண்மையான காரணம் அது வல்ல என்பதை உணர்ந்து உய்வீர்களாக.

உண்மையில் என்ன நடக் கிறது என்றால், பல தனியார் நிறுவனங் களில் ‘எச்.ஆர்’ என்று சொல்லப்படும் மனித ஆற்றல் சேர்ப்புத்துறைகளில் வரும் மனுக் களைப் பிரிக்கவும் படிக்கவும் பிறகு உள்வாங்கி இந்த ‘ரத்தினங்களை’ கண்டு பிடிக்கவும் ஆள்களோ. நேரமோ இருப்ப தில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ‘இ-மெயில்’ எனப்படும் மின்னஞ்சல் மூலம் வரும் மனுக்களை ‘மட்டும்’ மதிய உணவு முடித்துவிட்டு, ‘கண்கள் சொருகி ஒருவித மாக இருக்கும் நேரத்திலோ’ அல்லது ‘உன்னை வேலைக்கு எடுத்ததை நாலு எருமை மாட்டை வேலைக்கு வைத்திருக் கலாம்’ என்று மேலதிகாரி கடிந்துகொள் ளும்போதோதான், தனக்குப் பிறகு பலியா வதற்கான ஆடுகளின் மனுக்களைப் பரி சீலிக்கும் போக்கே சிலரிடம் இருக்கிறது.

இவர்களோ அல்லது இவர்கள் மேல் உள்ள கோபத்தில் இவர்களுடைய நேரடி மேலதிகாரியோ (அவரும்தான் பாவம் எவ் வளவு நேரம் ஆபீஸ் நேரத்தில் தூங்கி யும், பேப்பர் - புத்தகம் என்று படித்துக் கொண்டும் இருப்பார்? வாங்குகிற சம்பளத் துக்கு சில மனுக்களையாவது பார்த்துத் தொலைக்க வேண்டாமா? அப்படி அவர், நேரடியாகக் களத்தில் இறங்கும் நேரத்தில்தான் பலரின் மின்னஞ்சல் விண்ணப்பங்கள் பார்க்கப்பட்டு, அதை விட படுவேகத்தில் நிராகரிக்கப்படு கின்றன.

ஒரு விண்ணப்பத்தைப் பார்த்து 6 வினாடிகளுக்குள் வேண்டும், வேண்டாம் என்று முடிவு செய்கிறார்களாம்! அப்படி என்ன பெயர் ராசியா பார்க்கிறார்கள்? இல்லை ‘சப்ஜெக்ட்’ என்ற இடத்துக்கு நேராக, விண்ணப்பதாரர்கள் எதை இட்டு நிரப்புகிறார்கள் என்று படித்துவிட்டு அல் லது படிக்க முடியாமல், விபரீத முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

இந்த இடத்தில்தான் ‘9 தவறுகளை’ மனுதாரர்கள் செய்வதாக ‘வெட்டி அண்டு கோ’ நடத்திய ஒரு ஆய்வில் கண்டு பிடித்திருக்கிறார்கள். ‘குறைந்தபட்ச 9 தவறுகள்’ என்று இதைக் கருதி ஒவ்வொன்றாக இனி காண்போம்.

சில மனுதாரர்கள் தங்களுடைய பெயர், கல்வித்தகுதி, அனுபவம், குடும்பப் பின் னணி என்று எல்லாவற்றையும் கீழே எழுதி விட்டு, ‘சப்ஜெக்ட்’ என்ற இடத்தில் எதையுமே எழுதாமல் சிரமப்பட்டு மனுவைத் தள்ளிவிட்டுவிடுவார்கள். இப்படிப்பட்ட மனுக்களில் 90% திடக்கழிவு மேலாண்மைப் பிரிவுக்குத்தான் நேரடியாகச் செல்லும்!

அந்த வரியில், 20 முதல் 30 எழுத்து கள்தான் பிடிக்கும். சிலர் அதில் ‘ஆதெள கீர்த்தனாரம்பத்திலே…’ என்று ஆ…….ரம்பித்து ‘கண்பார்வைக்கு மறைந்த அழ காக’ முடித்திருப்பார்கள். அந்த வரியைப் படிக்க முடியாத கோபத்திலேயே அந்த மனுக்களும் நேரடியாக கில்லட்டினுக்குப் போய்விடும்!

எதைச் சொல்ல வருகிறோம், ஏன் சொல்கிறோம் என்பதே புரியாமல், உலக நாயகன் ஸ்டைலில் சிலர் அதில் கிறுக்கி வைப்பார்கள். அதுவும் ‘கர் வாப்ஸி’ ஆகிவிடும். வேறு சிலர், மைக் டெஸ்டிங் செய்வதைப்போல ஹலோ, டியர் என்றெல்லாம் கொஞ்சியிருப்பார்கள். எச்.ஆர். தேவதைகளுக்கு இந்த கொஞ்சல், கெஞ்சல் எல்லாம் கொஞ்சமும் பிடிக்காது. அதனால் அந்த மனுக்களும் சக்சக்சக்.

சில மனுதாரர்கள் ஜகத்குருவாகத் தங்களை நினைத்துக்கொண்டு அந்த நிறுவனத்தை வாழ்த்தி, ஆசிர்வதித்து எழுத ஆரம்பிப்பார்கள். (எச்.ஆரில். யாருக்கும் இன்கிரிமென்ட், புரமோஷன் பற்றி ஏதும் அறிகுறியே இல்லாதபோது இந்த வாழ்த்துகள் வயிற்றெரிச்சலைக் கிளப்பாதா?) அதனால் அந்த மனுக்களும் ‘ஷ்விஷ்’.

சிலர் கோனார் தமிழ் உரை நூல் இல்லாமல் நேரடியாகவே படித்து, நீண்ட வசனங்களை எழுதி பழக்கப்பட்டு அதை சப்ஜெக்டில் தொடங்கி மனுவின் தொடக்கத்திலேயே இறக்கியிருப்பார்கள். சாரி உங்கள் மனுக்களும் நிராகரிக்கப்பட்டிருக்கும்.

ஒரே மாதிரியான விண்ணப்பத்தை 7 நிறுவனங்களுக்கு (பக்கத்து வீட்டு மாமா உதவியுடன்) தயார் செய்து அனுப்பும் போது தவறான நிறுவனப் பெயருடன் இன் னொரு நிறுவனத்துக்கு அனுப்பப்படும் போது அதற்கும் ‘சங்கு’தான்.

இந்த மனுவை ‘வரும் வெள்ளிக் கிழமைக்குள்’ பார்க்கவும், ‘எந்த வெள்ளிக் கிழமையாவது’ பார்க்கவும் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், மொட்டையாக எழுதினால் அதுவும் படித்துப் பார்க்கப்பட மாட்டாது. அதற்காக ‘உடனே பார்க்கவும்’, ‘அர்ஜென்ட்’ என்றெல்லாமும் போட்டால், பி.பி. எகிறி உங்களுடைய இந்த ஜென்மத்துக்கு அல்லது அந்த நிறுவனத்தின் இந்த ஜென்மத்துக்கு உங்களுக்கு அங்கே வேலை கிடைக்காமல் போகலாம்.

‘சுயம்புவாக’வே மனுச் செய்வோர், யார் சொல்லி அல்லது யார் பரிந்துரைத்து மனுப் போடுகிறீர்கள் என்று தெரிவிப்பது நலம். இல்லாவிட்டால், ‘சும்மா போட்டுவைப்போமே’ என்ற கணக்கில் வந்த ‘கழிசடை மெயில்’ (ஜங்க் என்றால் இப் படிப் போடலாமா?) என்று கருதினால் அது அப்போதே ‘டெலிட்’ ஆகி விடும்

மனுதாரர்கள் கவனிக்க: இந்த அறிவுரைகள் அனைத்தும் மின்னஞ்சலில் ‘சப்ஜெக்ட்’ என்ற இடத்துக்கு எதிரில் ஒற்றை வரியில் எழுத வேண்டிய விஷயத்துக்காக மட்டுமே.

என்னது, முழு விண்ணப்பத்துக்கு ஆலோசனையா? சரிதான், அது தெரிந்தால் நாங்களே விண்ணப்பித்து நல்ல வேலையாக வாங்கியிருக்க மாட்டோமா?

காமெடி டைம்ஸ்வேலைக்கு மின்னஞ்சல்நகைச்சுவை பதிவுவேலை விண்ணப்பம்

You May Like

More From This Category

More From this Author