Published : 27 Dec 2014 10:40 AM
Last Updated : 27 Dec 2014 10:40 AM

சூரிய மின்சக்தி துறையில் ரூ. 5,800 கோடி முதலீடு

சூரிய மின்சக்தி துறையை ஊக்கப்படுத்தும் விதமாக 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5,800 கோடி மதிப்பிலான சூரிய மின் உற்பத்தி திட்டங்களில் மத்திய அரசு உள்ளதால் இது இத்துறைக்கு ஊக்கமளிப்பதாய் அமையும். மேலும் 2015 பட்ஜெட்டில் சூரிய மின் உற்பத்திக்கான ஒதுக்கீடு இருக்கலாம் என இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

மத்திய மின் தொகுப்புடன் (கிரிட்) இணைந்த 1,000 மெகாவாட் சூரிய மின்னாற்றல் நிலையத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தைச் செயல்படுத்த உள்ளன. இந்தத் திட்டத்துக்கு ஆகும் செலவில் சாத்தியக்கூறு பற்றாக்குறை நிதியாக (விஜிஎப்) ரூ. 1,000 கோடியை மூன்று ஆண்டுகளில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

என்டிபிசி, என்ஹெச்பிசி, ஐஆர்இடிஏ, சிஐஎல் மற்றும் இந்திய ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் இத்திட்டத்துக்கு ஒப்புக் கொண்டு சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்க முன் வந்துள்ளன. இதுதவிர, மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் இந்த திட்டத்தின் கீழ் சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்க 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. 300 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி ஆலைகளை 2019 க்குள் அமைக்க பாதுகாப்பு அமைச்சகமும் திட்ட

மிட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்கள் மற்றும் வடிவமைப்பாக இருக்கும். இதன் மூலம் சூரிய மின் னாற்றல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 25 சூரிய மின் உற்பத்தி பூங்காக்களை நாடு முழுவதும் அமைப்பதற்கான திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இதன் மூலம் 20,000 மெகா வாட் உற்பத்தி எட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலீடு 4,050 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், உத்திரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஒடிசா மற்றும் மேகாலயா மாநிலங்களில் இந்த சோலார் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.

இது குறித்து பேசிய சன்எடிசன் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிரிவு தலைவரும், இந்திய பிரிவின் இயக்குநருமான பசுபதி கோபாலன் ‘ 2015 ஆம் ஆண்டு சோலார் மின்சக்தி துறைக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் ஆண்டாக இருக்கும் என்றார். மேலும், கடந்த ஐந்து வருடங்களில் சோலார் மின் உற்பத்தி துறை குறித்த புரிதல் உருவாகியுள்ளது.

எனவே சோலார் மின் உற்பத்தி என்பது புதிய தொழில்நுட்பம் அல்ல என்றார். சோலார் மின்சாரம் என்பது வித்தியாசமானது அல்ல, நம்மிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு என்றார். விவசாயத்துக்கும் பயன்படாத நிலங்களைத்தான் சோலார் மின் உற்பத்திக்கு பயன்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x