Published : 09 Dec 2014 09:56 AM
Last Updated : 09 Dec 2014 09:56 AM

அமைச்சர் உறவினர் கொலையில் 3 பேர் குண்டாஸில் கைது

அமைச்சரின் உறவினர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டுவைச் சேர்ந்தவர் ரவி(45). தமிழக பால்வளத்துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகன். இவரை அக். 14-ம் தேதி, பெருமாள்பட்டு ஊராட்சி அலுவலகம் அருகே ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது.

இதுதொடர்பாக, அதிமுக வைச் சேர்ந்த செவ்வாப்பேட்டை ஊராட்சி தலைவர் வெங்கடேசன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் வெங்கடேசன், திருநாவுக்கரசு, நேமம், புளியந் தோப்பு புல்லட்தாஸ் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனகாபுத்தூர் சரண் என்கிற சரண்ராஜ், பெரவள்ளூர் குட்டி என்கிற பத்மநாபன், வேப்பம்பட்டு சந்திரகுமார் என்கிற முருகன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருவள்ளூர் எஸ்பி சரவணன் பரிந்துரைத்தார். அதன்பேரில் அவர்களை சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x