Published : 11 Dec 2014 10:08 AM
Last Updated : 11 Dec 2014 10:08 AM

மன்னார்குடி அருகே விடுதி கூரை விழுந்து 13 மாணவ- மாணவிகள் படுகாயம்: மூன்று அமைச்சர்கள் நேரில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பள்ளி விடுதியின் கூரை பெயர்ந்து விழுந்ததில் 13 மாண வர்கள் படுகாயமடைந்தனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு மாண வருக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.

மன்னார்குடி அருகிலுள்ள சவளக்காரன் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி உள்ளது. 700-க்கும் மேற் பட்ட மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அளவுக்கு வகுப்பறைகள் இல்லா ததால், பள்ளி வளாகத்திலேயே உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி அறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், நேற்று இந்த விடுதியில் உள்ள ஒரு அறையில் 8-ம் வகுப்பு ‘அ’ பிரிவு வகுப்பு நடைபெற்று வந்தபோது, திடீரென அறையின் மேற்கூரையில் இருந்து கான்கிரீட் காரைகள் பெயர்ந்து கீழே விழுந்தன. இதில் வகுப்பில் அமர்ந்திருந்த 13 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த மாணவர்கள் மன்னார்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட் டனர். இதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவர் பிரவீன்குமாருக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலை மறியல்...

காரைகள் பெயர்ந்து விழுந்த விடுதிக் கட்டிடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தரமற்ற முறையில் கட்டப்பட்டதால்தான் கட்டிட மேற்பகுதி இடிந்து விழுந் துள்ளது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இப்பள்ளி யின் மாணவர்கள், கிராம மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

அமைச்சர்கள் ஆய்வு...

விபத்து நடைபெற்ற பள்ளியை தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் சுப்பிரமணியம், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி, திருவாரூர் ஆட்சியர் மதிவாணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விபத்து ஏற்பட்ட விடுதியை இடித்துவிட்டு புதிதாகக் கட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x