Published : 17 Dec 2014 10:13 AM
Last Updated : 17 Dec 2014 10:13 AM

பெரியாறு அணை ஆய்வு கூட்டம் ரத்து

பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக வும் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு உதவியாக தமிழகம் - கேரளப் பிரதிநிதிகள் அடங்கிய மத்திய துணைக் குழு அமைக்கப்பட்டது.

பெரியாறு அணையைப் பார்வையிட்டு ஆய்வுக் கூட்டம் நடத்த தமிழகம் - கேரளப் பிரதிநிதி களுக்கு மத்திய துணைக் குழுத் தலைவர் அம்கரிஜித் கரிஸ் கிரீஸ் அழைப்பு விடுத்தார்.

தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சவுந்தரம், மாதவன் உள்ளிட்டோர் நேற்று தேக்கடிக்கு சென்றனர்.

படகுத் துறையில் கேரள வனத் துறையினர் தமிழகப் பிரதிநிதி களைத் தடுத்து, அங்கிருந்த பதிவேட்டில் பெயர், விவரங்களை பதிவு செய்யுமாறு கூறினர். இதனால், அதிருப்தி அடைந்த தமிழகப் பிரதிநிதிகள் உடனிருந்த மத்திய துணைக் குழுத் தலைவரிடம் முறையிட்டனர். இதனால், வெறுப்பான மத்திய துணைக் குழுத் தலைவர் அம்கரிஜித் கரிஸ் கிரீஸ், ஆய்வுக் கூட்டத்தை ரத்து செய்வதாகக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x