Published : 18 Dec 2014 12:42 PM
Last Updated : 18 Dec 2014 12:42 PM

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்: ராமதாஸ் பாராட்டு

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 வெற்றிகரமான ஏவப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இயக்கத்தின் முதல் கட்டமாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ஏவுகலன் வெற்றிகரமாக அதன் சோதனைப் பயணத்தை நிறைவு செய்திருக்கிறது.

ஆய்வுக்கான விண்கலத்தை நிர்ணயிக்கப்பட்ட 126 கி.மீ உயரத்தில் விட்டதில் தொடங்கி, அந்த விண்கலன் அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே வங்கக்கடலில் தரை இறங்கியது வரை அனைத்தும் எதிர்பார்த்தவாறே நடைபெற்று முடிந்துள்ளன.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு புதிய மைல்கல். நமது அறிவியலாளர்களால் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்பதை இந்த சோதனை முயற்சி உலகிற்கு பறைசாற்றியுள்ளது. இந்த சாதனையை படைத்த இந்திய வின்வெளி ஆராய்ச்சி அமைப்பின் அனைத்து அறிவியலாளர் மற்றும் பிற பணியாளர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியிலும் வெற்றிகளை குவிக்க எனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்" இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x