Published : 12 Jul 2019 05:59 PM
Last Updated : 12 Jul 2019 05:59 PM

நாகையில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டவரைத் தாக்கிய கும்பல்: 4 பேர் மீது வழக்கு

நாகப்பட்டினத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டவரை வீடு புகுந்த தாக்கிய 4 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மொகமது ஃபைசான். இவர் மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில், பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (28), அகத்தியன் (29), கணேஷ் குமார் (27) மற்றும் மோகன்குமார் (28) ஆகியோர் ஃபைசானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், மரக்கட்டைகளாலும் இரும்புக் கம்பிகளாலும் ஃபைசான் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காயமடைந்த ஃபைசான், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கீழ்வேளூர் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது கொலை முயற்சி, ஆயுதங்களால் தாக்குதல், பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் #Beef4life #WeLoveBeef #BeefForLife ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x