

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ங்களிலும் காவல்துறையில் ஏடிஎஸ்பி அந்தஸ்தில் மதுவிலக்கு, குற்றப் பிரிவு செயல்படுகிறது. இதன்கீழ் நியமிக்கப்படும் ஏடி எஸ்பிக்கள் மதுவிலக்கு, குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக் குகளை விசாரிக்கின்றனர்.
தற்போது மது விலக்கு (பிஇ.டபிள்யூ) பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு (சி.டபிள்யூசி) என, 2019 ஜூன் முதல் மாற்றப்பட்டுள்ளது. இப்பிரிவிலுள்ள கூடுதல் டிஎஸ்பி, கூடுதல் துணை காவல் ஆணையர்கள் பெண்கள், குழந் தைகளுக்கு எதிரான குற்றங்களை கவனிக்க டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டம், மாநகராட்சியில் செயல்படும் காவல் நிலை யங்களில் பெண்கள், குழந்தை களுக்கு எதிரான குற்றம், ‘போக்சோ’ உள்ளிட்ட புகார், வழக்கு விவரங்களை இப்பிரிவு போலீஸார் சேகரிக்கின்றனர்.
இதில் முக்கிய சம்பவம் பற்றி உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டும், அந்த வழக்குகளில் துரித தீர்வு காணும் வகையிலும் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
கூடுதல் டிஜிபி அளவில் இப்பிரிவு செயல்படத் தொடங்கி இருக்கிறது. மாநகர், மாவட்டத்தில் மதுவிலக்கு தடுப்பு பிரிவு கூடுதல் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளே இப்பிரிவையும் கவ னிக்கின்றனர்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான புகார், வழக்கு, விசா ரணைகளை உடனடியாக இப்பி ரிவுக்குத் தெரிவிக்க காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதற்காக தனியாக ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டம், ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களுக்கு வரும் பெண்களுக்கு எதிரான குற்றப் புகார்களை மகளிர் போலீ ஸாரே சேகரித்து ஏடிஎஸ்பி அலுவலகத்துக்கு தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே காவலர் பற்றாக்கு றையால் திணறும் மகளிர் போலீ ஸாருக்கு இதனால் கூடுதல் சுமை ஏற்படும். ஆகவே இப்பிரிவுக்கு தேவையான போலீஸாரை அதிகரிக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.