Published : 05 Jul 2019 05:33 PM
Last Updated : 05 Jul 2019 05:33 PM

களைவராமல் தடுக்க களை-பாய் தொழில்நுட்பம்: அதிக மகசூல் கிடைக்க விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை பரிந்துரை

பயிர் சாகுபடியில் களை வராமல் இருக்கவும், அதிக மகசூல் ஈட்டவும் விவசாயிகளுக்கு  'களை-பாய் தொழில்நுட்பத்தை' (weedmat/multhing) தோட்டக்கலைத்துறை பரிந்துரை செய்துள்ளது.

தோட்டக்கலைத்துறையில் காய்கறிகள், பூக்கள் சாகுபடியில் களைகளைக் கட்டுப்படுத்தாவிடில் பயிர்களுக்கு சமமாக வளர்ந்து விளைச்சலை 5 முதல் 50 சதவீதம் வரை குறைக்கும்.

களைகள் வயலில் இருப்பதால் சாகுபடி செலவும் அதிகரிக்கும். நீர்த் தேவையை அதிகரிக்கிறது. அதனால், தோட்டக்கலைத்துறை தற்போது பயிர் சாகுபடியில் களை வராமல் இருக்க களைப்பாய் டெக்னாலஜி (weedmat/multhing) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ‘டெக்னாலஜி’யில் இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. காய்கறிகள் சாகுபடியில் முன்னனி வகிக்கும் இஸ்ரேல் போன்ற வெளிநாடுகளில் இந்த டெக்னாஜியை விவசாயிகள் 20 ஆண்டாக அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த டெக்னாலஜி தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய பசுமை குடில் செய்யும் விவசாயிகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மற்ற சிறு, குறு விவசாயிகள், பெரும் விவசாயிகளை இந்த டெக்னாலஜி இன்னும் எட்டவில்லை.

அதனால், தோட்டக்கலைத்துறை தற்போது தங்குளுடைய தோட்டக்கலைப் பண்ணைகளில் இந்த களைப்பாய் டெக்னாலஜி முறையில் பயிர்களை சாகுபடி செய்து ஒரு மாதிரித்தோட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி கூறுகையில், ‘‘களைபாய் முறை சாகுபடியால் நிறைய நண்மைகள் இருக்கிறது. களை வராமல் தடுக்கலாம். இந்த முறையில் தண்ணீர் பாசனம் செய்தால் மண்ணில் ஈரப்பதம் காக்கப்படும். குறைந்தளவு தண்ணீரை பாசனம் செய்தாலே போதும். மண்ணின் வெப்பநிலை பாதுகாக்கப்படும். மண்ணில் உள்ள நுண்ணுயிர் செயல்பாடுகள் கூடும். அப்போது வேர் சிறப்பாக வேலை செய்யும். கூடுதல் மகசூல் அதிகரிக்கும். களைகள் வராததால் வேலையாட்கள் செலவு குறைவு. அதனால், பூஞ்சுத்தி தோட்டக்கலைப்பண்ணையில் இந்த களைப்பாய் மாதிரிதிடல் தயார் செய்துள்ளோம். அதை விவசாயிகள் பார்வையிட வைத்து வருகிறோம். ஒரு முறை அமைத்தால்

4 ஆண்டுகள் பயன்படுத்தலாம். இந்த களைபாய் அமைக்க ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அனைத்து தோட்டக்கலைப்பயிர்களுக்கும் பயன்படுத்தலாம், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x