Last Updated : 08 Jul, 2019 08:11 AM

 

Published : 08 Jul 2019 08:11 AM
Last Updated : 08 Jul 2019 08:11 AM

3 மாதங்களில் 10.21 லட்சம் பேர் பயணம்; ‘தேஜஸ்’ ரயில் மூலம் ரூ.17.8 கோடி வருவாய்

மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தேஜஸ் ரயிலில் இதுவரை 10.21 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.17.8 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு நவீன முறையில் தயாரிக்கப்பட்ட அதிவேக தேஜஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் மார்ச் 1-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் தொடங்கி வைத்தார். 13 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 57 பேர் பயணிக்கும் உயர்தர குளிரூட்டப் பட்ட பெட்டி ஒன்றும், தலா 78 பேர் பயணிக்கும் 12 குளிர்சாத னப் பெட்டிகளும் இணைக்கப்பட் டுள்ளன. இருக்கைகளின் பின்புறம் டிவி, மொபைல் போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

வியாழன் தவிர மற்ற நாட்களில் மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.30-க்கு சென்னை சென்றடையும். சென்னை யில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு மதுரை வந்த டையும். இந்த ரயில் அனைத்து தரப்பு மக்களிடமும் தற்போது வர வேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைப் பதாக ரயில்வே அதிகாரிகள் தெரி வித்தனர்.

மார்ச் 2 முதல் ஜூன் 27-ம் தேதி வரை தேஜஸ் ரயிலில் மதுரையில் இருந்து சென்னைக்கு ஏசி பெட்டி களில் 96,408 (87.01%) பேரும், உயர்தர ஏசி பெட்டியில் 5,768 (92.09%) பேரும் பயணித்துள்ளனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 10 லட்சத்து 21 ஆயிரத்து 76 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் மூலம் ரூ.17 கோடியே 7 லட்சத்து 94 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது என ரயில்வே வர்த்தகப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டண விவரம்

உயர்தர ஏசி பெட்டியில் உணவு டன் சேர்த்து ஒருவருக்கு கட்டணம் ரூ.2295, உணவு இன்றி ரூ.1940, ஏசி பெட்டியில் உணவுடன் சேர்த்து ரூ.1195, உணவு இல்லாமல் ரூ.895 வசூலிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x