Published : 10 Jul 2019 08:05 AM
Last Updated : 10 Jul 2019 08:05 AM

ஊராட்சிகள், பேரூராட்சிகளில் ‘அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’; ரூ.385 கோடியில் புதிதாக 3 மீன்பிடி துறைமுகங்கள்: 90 சதவீத மானியத்தில் பெண்களுக்கு ஆடுகள் வழங்கப்படும்- சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை மாவட் டங்களில் ரூ.385 கோடியில் புதிதாக 3 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப் படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சத்தில் ‘அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்’ செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

நடப்பாண்டில் 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சத்தில் 'அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்' செயல்படுத்தப் படும். இத்திட்டத்தின்படி ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் கபடி, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும் 3 விளையாட்டுகளுக்கு களம் அமைக்கப்படும். ஊரகப் பகுதி களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழும் பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் பொது நிதியில் இருந்தும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளித்து ஊராட்சி ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங் கப்படும். தேசிய, சர்வதேச போட்டிகளில் சீனியர், ஜூனியர் பிரிவுகளில் பதக்கம் வெல்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்பவர் களுக்கும் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும்.

ரூ.5 கோடியில் புதிய கட்டிடம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பழைய தலைமை அலுவலகக் கட்டி டத்தை இடித்து ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும். தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.3 கோடியே 50 லட்சத்தில் 12 ஆசிரியர் குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை சைதாப்பேட்டையில் மாநில தகவல் ஆணையத்துக்கு ரூ.27 கோடியே 79 லட்சத்தில் 5 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்படும்.

விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரைக்குப்பம் கழிவேலி பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ரூ.235 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். இந்த மீன்பிடி துறைமுகங்களில் 250 இயந்திர படகுகள், 1,100 கண்ணாடி நாரிழை படகுகளை நிறுத்த முடியும். இதனால் சென்னை, கடலூரில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நெருக்கடி குறையும்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆற்காட்டுத்துறையில் ரூ.150 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். இங்கு 100 விசைப் படகுகள், 500 கண்ணாடி நாரிழை படகுகளை நிறுத்த முடியும். நாகூர் மீன்பிடி இறங்குதளம் அமைந்துள்ள வெட்டார் ஆற்றின் வடக்குப் பகுதியில் ரூ.20 கோடியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் கட்டப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் பெரியதாழையில் ரூ.30 கோடியில் கருங்கல், கான்கிரீட் கற்களால் அலை தடுப்புச் சுவர் அமைக்கப்படும். சென்னை மீன்பிடி துறைமுகத்தின் தென் பகுதியில் ரூ. 10 கோடியில் சிறிய மற்றும் பெரிய படகுகள் அணையும் தளமும் மீன் விற்பனைக் கூடமும் அமைக்கப்பட உள்ளது.

பெண்களுக்கு ஆடுகள்

20 மாவட்டங்களில் பின்தங்கிய பகுதிகளைக் கண்டறிந்து அங்குள்ள பெண் பயனாளிகளுக்கு 90 சதவீத மானியத்தில் தலா 10 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் மற்றும் ஒரு வெள்ளாடு அல்லது செம்மறியாட்டு கிடா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு ஊராட்சிக்கு 45 பயனாளிகள் வீதம் 81 ஊராட்சி ஒன்றியங்களில் 3,645 பேர் பயனடைவர். நடப்பாண்டில் ரூ.24 கோடியே 6 ஆயிரத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

நடப்பாண்டில் அனைத்து மாவட்டங் களிலும் 2 லட்சத்து 50 ஆயிரம் கால்நடை அலகுகள் ரூ.22 கோடியே 46 லட்சத்தில் காப்பீடு செய்யப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் மத்திய கால்நடை நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகம் அமைக் கப்படும். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 100 கால்நடை மருந்தகங்களுக்கு அறைகலன்களுடன் கூடிய புதிய கட்டிடங்கள் தலா ரூ.37 லட்சம் வீதம் ரூ.30 கோடியில் கட்டப்படும்.

ஊட்டியில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் உள்ள விந்து உற்பத்தி நிலையத்தில், விந்தணுவில் பாலினம் பிரிக்கும் ஆய்வகம் ரூ.47 கோடியே 50 லட்சத்தில் அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x