Published : 07 Jul 2019 08:41 AM
Last Updated : 07 Jul 2019 08:41 AM

மத்திய பாஜக அரசின் நலத்திட்டங்களால் அடுத்த தேர்தலில் தமிழ்நாடு, கேரளாவில் தாமரை மலரும்: மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை

மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வரும் நலதிட்டங்களால் அடுத்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, கேரளாவில் தாமரை மலரும் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று நடைபெற்றது. அதில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்று, உறுப்பினர் சேர்க் கையைத் தொடங்கிவைத்தார். அப் பணிக்கான வாகனத்தையும் கொடி யசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கடந்த பாஜக ஆட்சியில் 8 கோடி தனிநபர் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 4 கோடி ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது மத்திய அரசு ரூ.1 விடுவித் தால், கடைக்கோடி மக்களை 15 பைசா மட்டுமே வந்தடைந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் மத்திய அரசு ரூ.100 விடுவித்தால், பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், கடைக்கோடி பயனாளியின் வங்கிக் கணக்கில் ரூ.100 முழுமையாக சென்றடைகிறது. இதை ஏழை மக்கள் உணர்ந்துள்ளனர்.

அதனால் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்தி உள் ளனர். மத்திய அரசு செயல் படுத்தி வரும் திட்டங்களால் அடுத்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, கேரளாவில் தாமரை மலர்ந்தே தீரும்.

பிற கட்சிகளில் குடும்பங்கள் ஆள்கின்றன. ஒரு மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் இரு கட்சிகள், மற்றொரு மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 3 கட்சிகள் உள்ளன. ஆனால் பாஜகவில் குடும்ப ஆட்சி இல்லை. உழைக்கும் தொண்டர் களின் ஆட்சி நடைபெறுகிறது. அதனால் பாஜக மீது நம்பிக்கை வைத்து தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் சேர்வார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செயலாளர் கரு.நாகராஜன், மாநில உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் சுப்பிரமணியம், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x