Published : 10 Jul 2019 09:37 AM
Last Updated : 10 Jul 2019 09:37 AM

அரசியலில் ஈடுபடும் எண்ணம் என் குடும்பத்தில் யாருக்கும் இல்லை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டம்

தனது குடும்பத்தில் யாருக்கும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித் துள்ளார்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வைகோவின் மனு நேற்று ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

மாநிலங்களவைத் தேர்தலில் எனது வேட்புமனு ஏற்கப்பட்டது மதிமுக நிர்வாகிகள், தொண்டர் கள் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. நான் வெற்றி தோல்விகளை சமமாகக் கருதுபவன். உயர்வு தாழ்வு களை கடந்து செல்வதுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டவன். தமிழகத்தின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு பெரும் ஆபத்து சூழ்ந்துள்ள சூழலில் நான் மாநிலங்களவை செல்கிறேன்.

மதிமுகவின் ஒரேயொரு எம்.பி. என்பதால் அனைத்து விவாதங் களிலும் பேச வாய்ப்பு கிடைக் காது. அப்படியே கிடைத்தாலும் சில நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். எனவே, அனைவரின் எதிர்பார்ப்பையும் எப்படி நிறை வேற்றுவது என்ற திகைப்பில், கவலையில் இருக்கிறேன்.

மதிமுகவில் மற்றவர்கள் பதவிக்கு வர வேண்டும் விரும்பு கிறவன் நான். பதவிதான் முக்கியம் என்றால் 1998, 1999-ல் மத்திய அமைச்சராகி இருப்பேன். 2004-ல் எம்.பி.யாகி இருப்பேன். தடா சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் இருந்த என் தம்பி ரவிச்சந்திரனுக்கு மதிமுகவில் எந்தப் பதவியும் கொடுக்கவில்லை. எல்லா வகையி லும் எனக்கு பக்கபலமாக இருக்கும் எனது மகனையும் நான் அரசிய லுக்கு கொண்டுவரவில்லை. ஆனால், அவரை அடுத்தகட்ட வாரிசு என்றெல்லாம் எழுதுவது வேதனை அளிக்கிறது. அரசிய லில் ஈடுபடும் எண்ணம் எனது குடும்பத்தில் யாருக்கும் இல்லை. எல்லாத் துயரங்களும், துன்பங் களும் என்னோடு போகட்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x