Published : 05 Jul 2019 09:33 AM
Last Updated : 05 Jul 2019 09:33 AM

கிரிக்கெட் போட்டியில் அசத்திய தொழில்முனைவோர்!

உலக கிரிக்கெட் கோப்பை போட்டிகள் பரபரப்பாய் நடைபெற்று வரும் சூழலில், கோவையில் இளம் தொழில்முனைவோருக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

இளம் இந்தியர்கள் (யங் இண்டியன்ஸ்) அமைப்பு சார்பில் 9-முறையாக ‘யங் இண்டியன் பிரீமியர் லீக்’ போட்டி கோவையில் நடந்தது. இதில்,  100-க்கும் மேற்பட்ட இளம் தொழில்முனைவோர் 8 அணிகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டி நடத்தப்பட்டது.

மகளிர் தொழில்முனைவோரையும் ஊக்குவிக்கும் வகையில், பெண் களுக்கான போட்டியும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது. 2011-ல் தொடங்கப்பட்ட ‘யங் இண்டியன் பிரீமியர் லீக்’ போட்டி, மக்களின் உடல் நலம், ஆரோக்கிய விழிப்புணர்வுக்காக நடத்தப்படுகிறது. சுந்தரம் மெர்சிடஸ் நிறுவனத்துடன் இணைந்து, கோவை யுவபாரதி பள்ளியில் இப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியை முன்னிட்டு, குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளும் நடைபெற்றன.

இதுகுறித்து யங் இண்டியன்ஸ் அமைப்பினர் கூறும்போது, “இளம் தொழில்முனைவோர் மட்டுமின்றி, சில மருத்துவர்களும் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. யங் இண்டியன் அமைப்பு தேசத்தின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதையும், மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்காகவே, இதுபோன்ற போட்டிகள் நடத்துகிறோம். கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்த அமைப்பு, இளைஞர் களிடையே ஒரு பெரிய இயக்கமாக மாறியுள்ளது. ‘நம்மால் முடியும்; நாம் செய்வோம்’ என்ற தாரக மந்திரத்துடன், தேச நலனை முன்னிறுத்தும் பயணத்தை தொடர்வோம்” என்றனர்.

இளம் தொழில்முனைவோருக்கான கிரிக்கெட் போட்டியில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

டிடிவி தினகரனின் அரசியல் எதிர்காலம்? - பத்திரிகையாளர் எஸ்.பி.லக்‌ஷ்மணன் பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x