Published : 29 Jun 2019 04:33 PM
Last Updated : 29 Jun 2019 04:33 PM

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வாபஸ் வாங்கியதற்கு அர்த்தம் வேறு: உதயநிதி சூசகம்

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வாபஸ் வாங்கியதற்கு வேறு அர்த்தம் உள்ளதாக  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரவாயல் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை, போரூரில் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் ஏராளமான திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதனை அடுத்து உதயநிதிக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய  உதயநிதி ஸ்டாலின், ’’அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சில நடிகர்கள் கூறிவந்தனர். ஆனால் அவர்கள் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை.

திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு இன்னொரு அர்த்தமும் உள்ளது.

விரைவில், பத்து அல்லது பதினைந்து நாட்களில் இந்த ஆட்சியின் மீதே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்பதுதான் நம் எண்ணம்’’ என்றார் உதயநிதி ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x