Published : 29 Jun 2019 10:44 PM
Last Updated : 29 Jun 2019 10:44 PM

கராத்தே தியாகராஜன் பேட்டியில் எனக்கு உடன்பாடில்லை; அழகிரியிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளேன்: ப.சிதம்பரம்

ப.சிதம்பரத்தை சந்தித்தப்பின் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் தலைவர் அழகிரியை விமர்சித்து பேட்டி கொடுத்திருந்தார். அதில் தனக்கு உடன்பாடில்லை என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட வேண்டும், கூடுதல் இடங்களை கேட்டுப்பெற வேண்டும் என பேசியிருந்தார். அவரது பேச்சு சர்ச்சையானது. இதனால் திமுக காங்கிரஸ் உறவில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கராத்தே தியாகராஜனை காங்கிரஸ் கட்சியிலிருந்து அகில இந்திய பொதுச்செயலாளர் வேணுகோபால் இடைநீக்கம் செய்தார். இந்நிலையில் இன்று ப.சிதம்பரத்தை இல்லத்தில் சந்தித்த கராத்தே தியாகராஜன், வெளியே ஊடகங்களிடம் தன்னை நீக்கியதை  விமர்சித்து பேட்டி அளித்தார்.

கே.எஸ்.அழகிரியை விமர்சித்திருந்தார் கராத்தே தியாகராஜன். கே.எஸ்.அழகிரி இதற்கு பதிலளித்திருந்தார். கே.எஸ்.அழகிரி, கராத்தேதியாகராஜன் இருவரும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள். தியாகராஜன் பேச்சு சிதம்பரத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அவர் கராத்தே தியாகராஜன் பேட்டியில் தனக்கு உடன்பாடில்லை என ட்விட்டரில் மறுப்பு தெரிவித்து அழகிரியிடம் மன்னிப்பு கேட்க கூறியதாக தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“கராத்தே தியாகராஜன் அண்மையில் பேசியது, அவர் அளித்த பேட்டி ஆகியவற்றில் எனக்கு அறவே உடன்பாடில்லை.

திமுக-காங்கிரஸ் கூட்டணியின் நல்லுறவுக்கு அவை பாதகமானவை, அவை ஏற்புடையதல்ல என்பது என்னுடைய கருத்து.

தநாகாக தலைவர் அழகிரியைச் சந்தித்து தியாகராஜன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அவரை அறிவுறுத்தி உள்ளேன்”

இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x