Published : 07 Aug 2017 01:25 PM
Last Updated : 07 Aug 2017 01:25 PM

பழையாற்றில் தொடரும் மணல் திருட்டு: கூட்டுக் குடிநீர் திட்டக் கிணறுகள் பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழையாற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடக்கிறது. இதனால், கூட்டுக் குடிநீர் திட்டக்கானகிணறு களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றான பழையாறு, சுருளோடு எனும் இடத் தில் உற்பத்தியாகி, 16,550 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளித்து, மணக்குடி பகுதி யில் அரபிக் கடலில் கலக்கிறது. இதன் குறுக்கே 14 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. முந்தைய காலங்களில் மக்கள் இந்த ஆற்று நீரை குடிக்கவும், குளிக்கவும் பயன் படுத்தி வந்தனர். தற்போது போதிய பராமரிப்பின்மையால் பழையாறு மிகவும் மாசடைந்து காணப் படுகிறது. ஆற்றின் கரையோரப் பகுதிகள் பல இடங்களில் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதால் சிறிய கால்வாயைப் போல் மாறி விட்டது.

வீரநாராயணமங்கலம்

தாழக்குடியை அடுத்த வீரநாராயணமங்கலம் பகுதியில் பல பேரூராட்சிகளுக்கு தண்ணீர் விநியோகிக்க பழையாற்றின் கரைப்பகுதியில் நீர் உறிஞ்சு நிலையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இவற்றுக்கு அருகில் மணல் கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. இதனால் ஆற்றின் இயற்கை வளம் பாதிக்கப்படுவதோடு, பேரூராட்சி களுக்கு தண்ணீர் வழங்கும் ஆழ் துளைக் கிணறுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

நடவடிக்கை இல்லை

இதுகுறித்து திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில அமைப்பாளரான இறச்சகுளத்தை சேர்ந்த காளியப்பன், ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

வீரநாராயணமங்கலம் பகுதி யில் உள்ள பழையாற்றின் கரையில், கன்னியாகுமரி- சுசீந்திரம்- தேரூர் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள் ளது. இதே போல், இறச்சகுளம், புத்தேரி, தாழக்குடி, கீழதத்தை யார்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் குடிநீர் தேவைக்காக பழை யாற்றங்கரையில் ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை எடுக்கின்றனர். வீரநாராய ணமங்கலத்தில் மட்டும் பழை யாற்றின் கரையில் 14 ஆழ்துளை கிணறுகள் உள்ளன.

kaliappanjpgகாளியப்பன்

இப்பகுதியில் மணல் திருட்டு தினசரி நடக்கிறது. இதற்காக மண் வெட்டி மூலம் ஆற்றை லாவகமாக வெட்டி வைத்துள்ளனர். இதன் வழியாக தினசரி மாட்டு வண்டிகளை கொண்டு வந்து மணல் அள்ளுகின்றனர்.

பின்னர், ஆள் அரவம் இல்லாத பகுதியில் வைத்து மாட்டு வண்டியிலிருந்து மணலை டெம்போ, சுமை ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் மாற்றி கடத்திச் செல்கின்றனர். இதுகுறித்து வருவாய், பேரூராட்சித் துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.

மாசுபடும் குடிநீர்

மண் அள்ளுவதற்காக ஆற்றுக் குள் குறுக்கும், நெடுக்குமாக தோண்டுவதால் ஆழ்துளை கிணறுகள் பாதிக்கப்படுகின்றன. அவற்றில் விரிசல்கள் விழுந்து ஆற்று நீர் நேரடியாக ஆழ்துளை கிணறுகளுக்குள் கலக்கிறது.

போதிய பராமரிப்பின்மையால் பழையாறு இப்போது பாயும் இடமெல்லாம் வழிநெடுக அழுக்குகளை சுமந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகளுக்குள் நேரடியாக ஆற்று நீர் கலப்பதால் குடிநீரும் மாசுபடுகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x