Published : 03 Aug 2017 08:48 AM
Last Updated : 03 Aug 2017 08:48 AM

தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரயில் நிலையங்களில் ரயில் மூலம் தண்ணீர் விநியோகம்

ரயில் நிலையங்களில் ஏற்பட் டுள்ள கடுமையான தண்ணீர் பிரச் சினையைப் போக்க 10 ஆண்டு களுக்கு பின் மீண்டும் ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும் பூர் ரயில் நிலையங்களில் இருந்து வெளியூருக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மற்றும் திருமால்பூர், சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணிக்கு புற நகர் மின்சார ரயில்கள் இயக்கப் படுகின்றன. இவற்றில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பய ணம் செய்கின்றனர். ஆனால், ரயில் நிலையங்களில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல் லாததால் மக்கள் அவதிப் படுகின்றனர்.

சென்னை குடிநீர் வாரியம் மூலம் சென்ட்ரல், எழும்பூர் உள் ளிட்ட ரயில் நிலையங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, ரயில் நிலையங் களுக்கு தண்ணீர் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, எழும்பூர் உள்ளிட்ட சில ரயில் நிலையங்களுக்கு தண்ணீர் வழங்குவதை குடிநீர் வாரியம் திடீரென நிறுத்திவிட்டது. இதனால், ரயில் நிலையங்களின் பயன்பாட்டுக்குத் தேவையான தண்ணீரை கொண்டுவர ரயில்வே அதிகாரிகள் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், செங் கல்பட்டு ஏரி மற்றும் சில கிணறுகளில் இருந்து ரயில் மூலம் எழும்பூருக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: சென்னையில் குடிநீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதால், குடிநீர் வாரியம் ரயில் நிலையங்களுக்கு வழங்கும் தண்ணீர் அளவை குறைத்து விட்டது. சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய ரயில் நிலை யங்களில் குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்யப்படு கிறது. இதனால், பயணிகளின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது. குடிநீரைத் தவிர, இதர பயன்பாட்டிற்கு போதிய அளவில் தண்ணீர் கொண்டுவர மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, செங்கல்பட்டு அருகே பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து தற்போது ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருகிறோம். தலா 3000 லிட்டர் அளவு கொண்ட 18 பிளாஸ்டிக் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப் படுகிறது.

3 நாட்களுக்கு ஒரு முறை என இதுவரையில் 3 முறை தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது. குடிநீருக்காக, தூய்மையான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு மீண்டும் ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்துவது மட்டுமல்லாமல், பேசின்பிரிட்ஜ், எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் மறுசுழற்சி ஆலைகள் மூலம் தினமும் 4 லட்சம் லிட்டர் தண்ணீரை சே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x