Published : 21 Aug 2017 07:12 PM
Last Updated : 21 Aug 2017 07:12 PM

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

தமிழக துணை முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர், மற்றும் நிதி, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி ஏற்றிருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதோடு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

மேலும், மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக பதவியேற்றிருப்பதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்கள் தத்தமது துறைகளில் சிறப்பாக செயல்பட்டு தமிழக மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x