Published : 27 Aug 2017 12:43 PM
Last Updated : 27 Aug 2017 12:43 PM

‘தி இந்து - ஃப்ரண்ட்லைன்’ வெளியீடான ‘தி ஆர்ட் ஆஃப் இந்தியா’ நூலுக்கு இதய மருத்துவர் கே.எம்.செரியன் புகழாரம்: ‘சுவாரசியமாக இருக்கிறது.. கவர்ந்திழுக்கிறது’

‘தி

இந்து - ஃப்ரண்ட்லைன்’ வெளியீடாக சமீபத்தில் வெளிவந்த ‘தி ஆர்ட் ஆஃப் இந்தியா’ புத்தகத்தை பிரபல இதய மருத்துவர் கே.எம்.செரியன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

‘தி இந்து’ குழுமத்தை சேர்ந்த ‘ஃப்ரண்ட்லைன்’ வெளியீடாக, பினாய் கே.பெஹல்லின் ‘தி ஆர்ட் ஆஃப் இந்தியா’ காஃபி மேசைப் புத்தகம், 500 பக்கங்களுடன் 2 தொகுதிகளாக சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. இந்தியாவின் சிற்ப, சுவரோவிய வளத்தை வெளிப்படுத்தும் 450-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் இந்த நூலின் ஆசிரியர் பினாய் கே.பெஹல் எடுத்தவை. டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி ஓவியக் கல்லூரியில் அவர் ஆற்றிய உரைகளும் இடம்பெற்றுள்ளன.

சிந்து சமவெளிப் பெண்ணின் குறுஞ்சிற்பம், சாரநாத் சிங்கங்கள், ஆந்திராவின் பாணிகிரியில் புத்தரின் பிறப்பைச் சித்தரிக்கும் புடைப்புச் சிற்பம், உத்தரப் பிரதேசத்தின் தேவ்கரில் இருக்கும் அனந்தசயன விஷ்ணு, அஜந்தா குகைகளில் உள்ள புத்தருடைய மகாபரிநிர்வாணத்தின் பிரம்மாண்டம், மாமல்லபுர சிற்பம், வராக அவதாரச் சிற்பம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் சிற்பங்கள், சுவரோவியங்கள், எல்லோராவின் புத்த, இந்து, சமண மதங்களின் குகைச் சிற்பங்கள், கர்நாடகாவின் சிரவணபெலகொலாவில் உள்ள பிரம்மாண்ட பாகுபலி சிலை, தமிழக சோழர்காலக் கோயில்கள், இமயமலைக்கு அப்பால் உள்ள புத்த மடங்களின் சிற்ப, ஓவிய மரபு, காஷ்மீரத்தின் பவுத்தக் கலைமரபு என்று இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள முக்கியமான சிற்ப, ஓவிய மரபுகள் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

இப்புத்தகம் வெளியாவது குறித்த அறிவிப்பு வந்ததுமே, அதற்கான முன்பதிவு குறித்து ஆர்வத்தோடு தொடர்புகொண்டு கேட்டறிந்தவர்களில் முக்கியமானவர் சென்னை ஃப்ரான்டியர் லைப்லைன் & டாக்டர் கே.எம்.செரியன் ஹார்ட் ஃபவுண்டேஷன் தலைவரும், பிரபல இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் கே.எம்.செரியன். ‘தி இந்து’ குழுமத்தின் வெளியீடு என்பதால், புத்தகத்தின் வருகைக்காக மிகுந்த ஆர்வத்தோடு காத்திருப்பதாக தொடர்ந்து இ-மெயிலில் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, அதை வாசித்த பிறகு, புத்தகம் பற்றிய தனது கருத்துகளையும் பகிர்ந்து கொண் டுள்ளார்.

‘‘நம் இந்திய நாட்டின் பண்பாடு, பாரம்பரியம், கலை, அறிவியல் மகத்துவங்களை இலக்கிய வடிவிலும், புகைப்பட வடிவிலும் மிக அற்புதமாக கண்முன்னே கொண்டு வந்திருக்கிறது ‘தி ஆர்ட் ஆஃப் இந்தியா’ நூல். இது மிகவும் சுவாரசியமாகவும், கவர்ந்திழுக்கும் வகையிலும் இருக்கிறது’’ என்று மனமார அவர் பாராட்டியுள்ளார்.

500 பக்கங்களுடன் 2 தொகுதிகளாக வெளிவந்துள்ள ‘தி ஆர்ட் ஆஃப் இந்தியா’ நூல் விலைரூ.5,000.

இப்புத்தகத்தை சென்னையில் உள்ள ‘தி இந்து’ தலைமை அலுவலகத்திலும், அனைத்து கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.

இப்புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள் 044-33031249 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x