Published : 04 Aug 2017 08:42 AM
Last Updated : 04 Aug 2017 08:42 AM

வருமான வரித் துறை அலுவலகத்தில் 5-வது முறையாக ஆஜரானார்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தீவிர விசாரணை - பினாமி சொத்துகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு

வருமான வரித் துறை அலுவல கத்தில் 5-வது முறையாக நேற்று ஆஜரான அமைச்சர் விஜயபாஸ் கரிடம் வீட்டு சமையல்காரர் பெய ரில் குவாரி உரிமம் வாங்கியிருப்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர் மீது பினாமி சொத்துகள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

தமிழக சுகாதாரத் துறை அமைச் சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள், மணல் குவாரிகள் என அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்படன.

விஜயபாஸ்கரின் உதவியாளர் கள், நண்பர்களான திருவல்லிக் கேணி நயினார் முகம்மது, கீழ்ப் பாக்கம் ருபேசா, மயிலாப்பூர் லட்சுமிநாராயணா, எழும்பூர் கார்த் திக், புதுக்கோட்டை பாஸ்கர் ஆகி யோரின் வீடுகளிலும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட ஆவணங் களை ஆய்வு செய்ததில் ஏராள மான புதுத் தகவல்கள் கிடைத்துள் ளன. இதுகுறித்து வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப் பூர் தாலுகா கரடிக்காடு பகுதியில் 2 குவாரிகளை அமைச்சர் விஜய பாஸ்கர் நடத்தி வருகிறார். கனிம வளத் துறையிடம் இருந்து இந்த குவாரிகள் தொடர்பான ஆவணங் களை வாங்கி ஆய்வு செய்தபோது, 2 குவாரிகளும் எஸ்.ஏ.சுப்பையா என்பவரின் பெயரில் இருந்தன. எஸ்.ஏ.சுப்பையா யார் என்று விசா ரித்தபோது, அவர் விஜயபாஸ்கர் வீட்டில் சமையல் வேலை செய்பவர் என்பது தெரிந்தது.

இரண்டு குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கட்டுப் பாட்டில் செயல்படும் ராசி புளூ மெட்டல்ஸ் நிறுவனம் மூலம் விற் பனை செய்யப்பட்டுள்ளன. குவாரி களில் 17 மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே கற்களை வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 38 மீட்டர் ஆழத்துக்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.

குவாரி தொடர்பாக தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சேகர் ரெட்டியின் கூட்டாளியாக அமைச்சர் விஜயபாஸ்கர் இருப் பதற்கான ஆதாரங்களும் கிடைத் துள்ளன. மேலும், திருவேங்கை வாசல் பகுதியில் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சொந்தமாக 100 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தவறான வழியில் வந்த பணத் தின் மூலம் இந்த நிலத்தை வாங்கி யிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, முதல்கட்டமாக விஜயபாஸ்கருக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை வருமான வரித் துறை முடக்கி வைத்துள்ளது.

தனது வீட்டு உதவியாளர் பெய ரில் பினாமி சொத்து வாங்கி, அந்த வருமானத்தை அடிப்படையாக வைத்து மேலும் சொத்துகள் சேர்த்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவற்றையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பினாமி சொத்து கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.

பினாமி பெயரில் சொத்துகள் வாங்கியது குறித்து விசாரணை நடத்த, வருமான வரித் துறை அலு வலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடந்த சில நாட்களாக சம்மன் அனுப்பினோம். ஆனால், நீட் தேர்வு விவகாரத்தால் அவர் டெல்லி யில் தங்கியிருப்பதாகக் கூறி, விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில் சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை புலனாய்வு பிரிவு அலுவல கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் சமையல் காரர் பெயரில் குவாரி உரிமம் மற் றும் பினாமி சொத்துகள் குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். ஏற் கெனவே 4 முறை விஜயபாஸ் கரிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். வரு மான வரித் துறை விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜ ராவது இது 5-வது முறையாகும்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

விசாரணை முடிந்து இரவு 7.30 மணி அளவில் வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கிருந்த நிருபர்களிடம் கூறும் போது, ‘‘பொது வாழ்வில் இருப் பவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் வருவது சகஜம் தான். அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து இருக்கிறேன். வருமான வரித் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். என் னைப் பற்றி வரும் வதந்திகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பேன்’’ என்றார்.

இந்த விசாரணையின் அடிப் படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்ப தாக வருமான வரித் துறை வட்டாரங் கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x