Published : 23 Aug 2017 09:24 AM
Last Updated : 23 Aug 2017 09:24 AM

தினகரன் - வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் மோதல்: கும்பகோணம், மன்னாகுடியில் உருவ பொம்மைகள் எரிப்பு

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதிமுக எம்.பி. வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் நேற்று தஞ்சாவூர் ரயிலடியில் தினகரன் உருவபொம்மையை எரித்தனர். அப்போது, அதைத் தடுக்க வந்த தினகரன் ஆதரவாளர்களுக்கும், வைத்திலிங்கம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதிமுக மாநிலங்களவை எம்பி ஆர்.வைத்திலிங்கத்தை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக, கட்சியின் அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் நேற்று அறிவித்தார். இதையடுத்து, தினகரன் ஆதரவாளர்கள் தஞ்சாவூர் ரயிலடி முன்பு குவிந்து இனிப்புகள் வழங்கி, வெடி வெடித்துக் கொண்டாடினர். அப்போது அங்கு வந்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தினகரனின் உருவபொம்மையை திடீரென எரித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கும்பகோணம், மன்னார்குடி, பேராவூரணி பகுதிகளிலும் இரு தரப்பு ஆதரவாளர்கள் பரஸ்பரம் உருவபொம்மையை எரித்து கோஷங்கள் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x