Published : 03 Aug 2017 11:16 AM
Last Updated : 03 Aug 2017 11:16 AM

ஆஸ்திரேலியா நாட்டில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்: பல்கலைக்கழக நிகழ்ச்சியில் தகவல்

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அயல்நாட்டுத் தமிழர்கள் குறித்த சிறப்பு சொற் பொழிவு தமிழியல் புலத்தில் நேற்று நடைபெற்றது. தமிழியல் புல பொறுப்புத் தலைவர் வை. ராமராச பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ்துறை தலைவர் (பொறுப்பு) போ.சத்தியமூர்த்தி வரவேற்றார்.

இதில் பங்கேற்ற ஆஸ்திரேலிய நாட்டு தமிழறிஞர் சுவாமி சுப்ரமணியன் பேசியது:

ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் குடியேறியவர்கள். பூர்வீக குடிகளாக வாழும் அவர்கள் மொழிவளம் இன்றி வசிக்கின்றனர். அங்கு மதிப்பின்றி வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்றைக்கும் அங்கு மொழி போர் நடக்கிறது.

600 ஆண்டுக்கு முன், குக் என்பவரால் கண்டறிந்த ஆஸ்திரேலியாவில் இந்திய தமிழர்கள் குடியேறி வளம் சேர்த்தனர். சிட்னி கடற்கரையில் தணிக்காசலம் பிள்ளையின் சிலை உள்ளது. முதலில் யார், யார் குடியேறினர் என்ற விவர பட்டியல் கல்வெட்டில் பொறிக் கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இரண்டாம் நிலையில் வகிப்ப வர்கள் சீனர்கள். இவர்களின் மொழி ஆட்சி மொழியாக நிலைத்துவிட்டது. அந்நாட்டின் வளர்ச்சி சீனர்களை நம்பி உள்ளது. பெயர் பலகை, பொது அறிவிப்புகள் ஆங்கில த்திலும், சீன மொழியிலும் பிரசுரிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது தமிழை ஆஸ்திரேலிய மொழியாக அரசு அறிவித்துள்ளது.

அங்கு இலங்கைத் தமிழர்களு க்கென தனி மரியாதை உண்டு. அவர்கள் பேசும் தமிழ்மொழி தூய்மையானது. தமிழ் கடவுள், பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். தமிழர்கள் இடையூறு இன்றி சுதந்திரமாக வாழ காரணம் உழைப்பு, திறமை, அறிவுசார் முதிர்ச்சி மட்டுமே. டாஸ்மோனியா என்ற ஆஸ்திரேலிய தீவு 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

லெமூரியா கண்டத்தையொட்டிய இப்ப குதியில் தமிழின் சாயல் வெளிப்படுகிறது. வாழ்வை நல்ல முறையில் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் 11 மாதங்கள் உழைக்கின்றனர். 1 மாதம் உலகத்தைச் சுற்றி மகிழ்கின்றனர். இதற்கு அரசும் உதவி செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பேராசிரியர்கள், முதுகலை மாணவர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் சங்கரேசுவரி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x