Last Updated : 27 Aug, 2017 04:48 PM

 

Published : 27 Aug 2017 04:48 PM
Last Updated : 27 Aug 2017 04:48 PM

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு பதவிக்காகத்தான்: செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு பதவிக்காகத்தான். அது தொண்டர்கள் இணைப்பு அல்ல என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். ஜனாதிபதியை சந்திப்பது தொடர்பாக டிடிவிதான் முடிவு எடுப்பார் என்றும் குறிப்பிட்டார்.

நட்சத்திர விடுதியிலிருந்து ரிசார்ட்டுக்கு புறப்படும் போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

''பத்து எம்எல்ஏக்களை வைத்திருந்த பன்னீர்செல்வம், இந்த அரசை ஊழல் அரசு என்று கூறினார். அவருக்கு துணைமுதல்வர் பதவி தந்துள்ளார்கள். தற்போது சசிகலா, டிடிவி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

பொதுக்குழுவை கூட்ட சசிகலாவுக்கு அதிகாரம் உள்ளது. நீக்கும், சேர்க்கும் பொறுப்பு அவருக்கு உண்டு. அதிமுகவை ஜெ. வழியில் சசிகலா நடத்துகிறார். நடத்தப்படுகிறது.

டிடிவி தினகரனை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இன்னும் பல எம்எல்ஏக்கள் வருவார்கள். தொடர்ந்து பயணிக்கிறோம். வெற்றி நோக்கி எங்கள் பயணம் செல்கிறது.

எத்தனை நாட்கள் நாங்கள் தங்குவோம் என்பது பற்றி கேட்கிறீர்கள். டிடிவி வழிகாட்டுதல் படி அவர் என்ன கருத்து சொல்கிறார்களா அதன்படி செயல்படுவோம் பொதுக்குழு கூட்டுதல் பற்றி சசிகலாவும், டிடிவியும் முடிவு எடுப்பார்கள்.

ஆளுநர் அழைக்காவிட்டால் ஜனாதிபதியை சந்திப்பது தொடர்பான கருத்து தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்த கருத்துதான். ஜனாதிபதியை சந்திப்பது டிடிவிதான் முடிவு எடுப்பார். இலக்கை நோக்கி பயணிக்கிறோம். அதை எட்டும் வரை பயணம் தொடரும். டிடிவி வழிகாட்டுதல் படி பயணம் தொடரும்.

பொதுச்செயலராக சசிகலா பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டவர். அதை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குதான் உள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் பன்னீர் செல்வம். தற்போது ஈபிஎஸ் அவரை பொருளாளர் என்று கூறுகிறார். நீக்கப்பட்டதை மறந்துவிட்டு, மாற்று கருத்தை வசதிக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள்

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு தொண்டர் இணைப்பு அல்ல-மக்கள் விரும்பும் இணைப்பும் அல்ல. பதவிக்காக நடந்ததுதான் இந்த இணைப்பு'' என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x