Published : 29 Aug 2017 08:00 AM
Last Updated : 29 Aug 2017 08:00 AM

டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி வழக்கு: ஓய்வுபெற்ற அமலாக்கப் பிரிவு அதிகாரியிடம் குறுக்கு விசாரணை

டிடிவி. தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் நேற்று ஆஜரான அரசு தரப்பு சாட்சியான ஓய்வுபெற்ற அமலாக்கப் பிரிவு அதிகாரியிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக குறுக்கு விசாரணை நடந்தது.

இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் ரூ. 1 கோடியே 93 லட்சத்து 313 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலரை முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாக டிடிவி. தினகரன் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-97 காலகட்டத்தில் 2 வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த 2 வழக்குகளிலும் அவர் மீது கடந்த ஏப்ரல் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் எழும்பூர் 2-வது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பாக நேற்று குறுக்கு விசாரணை தொடங்கியது. அரசு தரப்பு சாட்சியான ஓய்வுபெற்ற அமலாக்கப் பிரிவு அதிகாரி கிஸ்தூர் சந்திடம், தினகரன் தரப்பு வழக்கறிஞர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். சுமார் 3 மணி நேரம் இந்த குறுக்கு விசாரணை நடந்தது. அவற்றைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29-க்கு (இன்று) தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x