Published : 16 Jul 2017 11:17 AM
Last Updated : 16 Jul 2017 11:17 AM

அரசு, உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு: கலந்தாய்வு நாளை தொடங்குகிறது

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிக ளில் பி.எட். மாணவர் சேர்க் கைக்கான கட்-ஆஃப் மதிப் பெண் இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. கல்லூரியை தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு நாளை (திங்கள்கிழமை) தொடங்கு கிறது.

தமிழகத்தில் 7 அரசு கல்வியி யல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரி களும் உள்ளன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். படிப்பில் 1,753 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) மேற்குறிப்பிட்ட அரசு ஒதுக் கீட்டு பி.எட். இடங்களில் சேர 5,733 பேர் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரி சீலிக்கப்பட்டு கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக கலந்தாய்வை நடத்தவுள்ள சென்னை லேடி வெலிங்டன் கல்வி யியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வரும், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாள ருமான பேராசிரியர் எஸ்.கலைச் செல்வன் வெளியிட்டுள்ள அறி விப்பில் கூறியிருப்பதாவது:

பி.எட். சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண், பாடப் பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந் தாய்வு, ஜூலை 17-ம் தேதி (திங்கள் கிழமை) தொடங்கி ஜூலை 22-ம் தேதி முடிவடையும். கலந்தாய்வு கால அட்டவணையை இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உரிய கட்-ஆஃப் மதிப்பெண் இருந்தும், அழைப்புக்கடிதம் கிடைக்கப் பெற வில்லை என்றால் குறிப்பிட்ட நாளில் கலந்தாய்வில் தேவை யான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

கலந்தாய்வுக்கு வருவோர் அனைத்து சான்றிதழ்கள், அவற் றின் நகல்கள், கலந்தாய்வுக் கட்டணமாக ரூ.2000-க்கான டிமாண்ட் டிராப்ட் (“The Secretary, Tamilnadu B.Ed. Admission 2017-18” என்ற பெயரில்) ஆகியவற் றைக் கொண்டுவர வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.1,000-க்கு டி.டி. எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x