Published : 15 Jul 2017 09:24 AM
Last Updated : 15 Jul 2017 09:24 AM

மருத்துவப் படிப்பில் சேர 85 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து: வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கருத்து

எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்து வப் படிப்புகளில் சேர, மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 85 சதவீத உள்ஒதுக்கீடு செல்லாது எனக் கூறி, அதனை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால் ஏற்படவுள்ள சாதக, பாதக விளைவுகள் பற்றி பல்வேறு தரப்பினர் தங்களின் கருத்துகளை ‘தி இந்து’ நாளித ழுடன் பகிர்ந்து கொண்டனர்.

அவர்களின் கருத்துகள் வருமாறு:

பி.எஸ்.அஜிதா (உயர் நீதிமன்ற வழக்கறிஞர், சென்னை):

நடப்பாண்டு ‘நீட்’ தேர்வு நடைபெறும் என்று தெரிந்தும், தமிழக அரசு அதனை எதிர் கொள்ள எந்த நடவடிக்கை யையும் எடுக்கவில்லை. நீட் தேர்வு முடிந்து கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாக மாநில பாடத்திட்டத்தில் படித்த வர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அரசாணை பிறப்பித்தது மக்களை ஏமாற்றும் செயல். தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வலுவற்றது என்பதால்தான் உயர் நீதிமன்றத்தால் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலைக்கு மாநில அரசுதான் காரணம்.

ஏ.சிராஜூதீன் (உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், சென்னை):

மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் திறனை சோதிப்பதற்காகத் தான் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. அவ்வாறு தேர்வு நடத்திவிட் டால், அந்த தேர்வின் அடிப் படையில் மாணவர் சேர்க்கை நடத்து வதுதான் சரியான நடைமுறை. அதை விடுத்து, மாநில பாடத்திட்டத்தில் படித்த வர்களுக்கு தனியே இடஒதுக் கீடு அளிக்க முடியாது. அவ்வாறு அளிப்பது அரசியல மைப்புச் சட்டப் பிரிவு 14-ஐ மீறுவதாகும். எனவே, உயர் நீதிமன்றம் சரியா கத்தான் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ம.பிரிட்டோ (வழக்கறிஞர், நெல்லை):

தமிழகம் முழுவதும் கடந்த கல்வியாண்டில் மாநில பாடத்திட்டத்தில் அறிவியல் மற்றும் உயிரியியல் பாடத்தை 4.20 லட்சம் மாணவ, மாண வியர் படித்திருந்தனர். அவர் களில் 88,431 பேர் ‘நீட்’ தேர்வு எழுதியிருந்தனர்.

அதே நேரத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற 4675 மாணவ, மாணவியர் மட்டுமே ‘நீட்’ தேர்வு எழுதியிருந்தனர். இதை கருத்தில் கொண்டே 85% உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் உள்ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்தது சமூக நீதிக்கு எதிரானது.

சு.மூர்த்தி (கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப் பாளர், திருப்பூர்):

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேர வையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்பு தலைப் பெற முயற்சிக்க வேண் டும். இல்லையென்றால் 90 சதவீத கிராமப் புற ஏழை மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள்.

ஆ.தேவராஜ் (கல்லூரி பேராசிரியர், தூத்துக்குடி):

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கிடைக்காததால் ஏமாற்ற மடைந்திருந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் இந்த அரசாணை சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால், இந்த அரசாணையும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் மாணவர்கள் மிகுந்த குழப்பத் துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

சி.மணிகண்டன் (இளங்கலை அறிவியல் மாணவர், மதுரை பல்கலைக்கழகம்):

கிராமப்புற மாணவர்கள் ‘நீட்’ தேர்வு பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் உள்ளனர். உடனடியாக ‘நீட்’ தேர்வை நடத்திவிட்டு, தற்போது தமிழக அரசு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வழங் கிய 85 சதவீத உள் ஒதுக்கீட் டையும் ரத்து செய்திருப்பது கிராமப்புற மாணவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தேன்மொழி (உதவிப் பேராசிரியர், கோவை):

85 சதவீத மருத்துவ உள் ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள் ளது என்பது மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர் களை மேலும் பாதிப்புக்குள் ளாக்கும். இத்தகைய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், மாநிலப் பாடத் திட்டத்தை மேம்படுத்துவது அவசியம்.

பி.சரவணன் (எல்ஐசி ஊழியர், சமூக ஆர்வலர், வேலூர்):

85 சதவீதம் உள்ஒதுக்கீட்டால் கிராமப்புற மாணவர்கள் யாரும் பயன்பெறவில்லை. மெட்ரிக் பள்ளியில் படித்து நீட் கோச்சிங் சென்ற பெரும்பாலான மாணவர் கள்தான் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ‘நீட்’ தேர்வு குறித்த நடை முறையை தமிழக அரசு தொடங்கியிருக்க வேண்டும்.

ஆ.சிங்கராயர் (சமூக ஆர்வலர், வேலூர்):

தமிழ் சமூகம் அறிவார்ந்த சமூகமாக இதுவரை வளர்ந்து வந்தது. முன்னேறி வந்த ஒரு சமூகம் இன்று ‘நீட்’ தேர்வால் மீண்டும் கீழே தள்ளப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்.

எஸ்.புஷ்பவனம் (தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு செயலாளர், திருச்சி):

அரசியலமைப்புச் சட்டத் துக்கு முன் அனைவரும் சமம். இதனை உறுதி செய்யும் வகையில் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு உள்ளதால், அதனை நான் வரவேற்கிறேன். இதன் மூலம் நன்றாக படிக் கும் மாணவர்களுக்கு கிடைக் கும் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

கவுதம் நாராயணன் (மருத்துவக் கல்லூரி மாணவர், மதுரை):

‘நீட்’ தேர்வு கட்டாயமாக் கப்பட்டால் அதற்கான பயிற்சி கட்டணமும் அதிகரிக்கும். இத் தகைய பயிற்சிகளும் நகர்புற மாணவர்களுக்கே பெரும்பாலும் கிடைக்கும். இதனால் இன்னும் 5 ஆண்டுகளில் கிராமப்புறங் களில் குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்ய மருத்துவர்கள் இருக்கமாட் டார்கள்.

இவ்வாறு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x