Last Updated : 24 Jul, 2017 01:07 PM

 

Published : 24 Jul 2017 01:07 PM
Last Updated : 24 Jul 2017 01:07 PM

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, பொய்கை, மாம்பழத்துறையாறில் பராமரிப்பின்றி பாழ்பட்டு கிடக்கும் பூங்காக்கள்: இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள் சேதம்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் உள்ள பூங்காக்கள் போதிய பராமரிப்பின்றி பாழ்பட்டு கிடக்கின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2, பொய்கை, மாம்பழத்துறையாறு அணைகள், கன்னியாகுமரி மாவட்டத்தின் பாசனத் தேவையை நிவர்த்தி செய்யும் முக்கிய அணைகளாக விளங்குகின்றன.

பொதுப்பணித்துறை நீர்ஆதார பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணைகள், மலையோரங்களில் ரம்மியமாக காட்சியளிப்பதால், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் அணைப் பகுதிகளையும் பார்வையிட்டு செல்கின்றனர்.

அணைப் பகுதிகளை பரா மரிக்கவும், பாதுகாக்கும் வகை யிலும் ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஆனால் அவற்றையும் மீறி அணைப் பகுதிகளில் உள்ள பூங்காக்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.

சோலார் விளக்கு சேதம்

பேச்சிப்பாறை அணைப் பகுதி யில் உள்ள பூங்காவில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதே போல் பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதிகளில் உள்ள பூங்காக்களும் போதிய பராமரிப்பற்ற நிலையில் உள்ளன. இங்கு சோலார் விளக்குகள் உடைக்கப்பட்டுள்ளன. வில்லுக் குறியை அடுத்துள்ள மாம்பழத் துறையாறு அணை பூங்காவில் குழந்தைகளுக்கான ராட்டினங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

செண்பக ராமன்புதூரை அடுத்துள்ள பொய்கை அணையில் சோலார் விளக்குகள் மற்றும் சோலார் பேனல்கள் உடைத்து சூறையாடப்பட்டுள்ளன.

அற்புதமான சூழல்

கன்னியாகுமரி வந்த மதுரை யைச் சேர்ந்த சுற்றுலா குழுவினர் கூறும்போது, “பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத் துறையாறு, பொய்கை அணை பகுதிகளை பார்வையிட்டோம். பிற மாவட்டங்களை விட அற்புத மான சூழல்களில் அணைகள் அமைந்துள்ளன. ஆனால் அங்குள்ள பூங்காக்கள் பராமரிக் கப்படாமல் உள்ளன. முறையாக பராமரித்தால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைவர்” என்றனர்.

சீரமைக்க நடவடிக்கை

பொதுப்பணித்துறையினர் கூறும்போது, “அணைப் பகுதிகளில் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அங்கு வரும் சிலர், பூங்கா உபகரணங்களையும், சோலார் விளக்குகளையும் சேதப்படுத்தும் போக்கு உள்ளது. பார்வையாளர் கள் விழிப்புடன் செயல்பட்டு ஒத் துழைப்பு வழங்கினால் தான் இது போன்ற சேதங்களை தவிர்க்க முடியும். பழுதான உபகரணங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x