Published : 10 Jul 2017 10:07 AM
Last Updated : 10 Jul 2017 10:07 AM

மொபைல் செயலிகளை உருவாக்க சென்னை ஐஐடி இலவச பயிற்சி

மொபைல் செயலிகளை (ஆப்) உருவாக்குவது குறித்து சென்னை ஐஐடி ஆன்லைனில் இலவசப் பயிற்சி அளிக்கிறது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை ஐஐடியும், ஹசுலா பவுண்டேஷனும் இணைந்து மொபைல் செயலி உருவாக்கும் பயிற்சியை ஆன்லைனில் இலவச மாக அளித்து வருகின்றன. இன்ட் ரொடக் ஷன் டு மாடர்ன் அப்ளி கேஷன் டெவலெப்மென்ட் (IMAD) என்ற இந்த ஆன்லைன் பயிற்சி என்பிடிஎல் திட்டத்தின் மூலமாக அளிக்கப்படுகிறது. 8 வார காலம் கொண்ட இந்த பயிற்சியில் சேர எவ்வித கட்டணமும் கிடையாது. பயிற்சி முற்றிலும் இலவசம்.

இந்த ஆன்லைன் பயிற்சியில் சேருவதன் மூலம், மொபைல் செய லிகளை உருவாக்குவது எப்படி என்பதை எளிதாக அறிந்துகொள்ள முடியும். சொந்தமாக மொபைல் செயலிகளை உருவாக்கும் திற னையும் பெற முடியும்.

பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஐஐடி சார்பில் பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங் கப்படும். மொபைல் செயலி துறை யில் வேலைவாய்ப்பு பெற இந்த ஆன்லைன் பயிற்சி பெரிதும் உதவி கரமாக இருக்கும். இப்பயிற்சியில் இதுவரையில் 83 ஆயிரம் பேர் சேர்ந்து பயனடைந்துள்ளனர். அவர்கள் மூலமாக 6,700-க்கும் புதிய மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்ட ஆன்லைன் பயிற்சி ஜூலை 24-ம் தேதி தொடங்குகிறது. இந்த இலவச மொபைல் செயலி பயிற்சியில் சேர விரும்புவோர் www.imad.tech என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். புரோகிராமிங் சம்பந்தப்பட்ட அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ளவும், நினைவுபடுத்திக் கொள்ளவும் தேவையான தகவல்கள் இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x