Published : 01 Jul 2017 09:18 AM
Last Updated : 01 Jul 2017 09:18 AM

எப்எம்ஜிஇ தேர்வுக்கு சென்னையில் லிம்ரா நடத்தும் பயிற்சி வகுப்புகள்: ஜூலை 10-ம் தேதி தொடங்குகிறது

வெளிநாட்டில் மருத்துவப் பட்டப்படிப்பு முடித்து இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றுபவர்களுக்காக, எப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை இந்திய மருத்துவ கவுன்சில் நடத்துகிறது. இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் நடத்துகிறது. 2017 டிசம்பர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை 10-ல் தொடங்கவுள்ளன. இதற்கான பதிவு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து லிம்ரா நிறுவனத்தின் இயக்குநர் முகமது கனி மேலும் கூறியதாவது:

டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் 10 ஆண்டுக்கு மேல் அனுபவம் பெற்ற மருத்துவப் பேராசிரியர்கள் இப்பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர். ஜூலை 10-ம் தேதி முதல் ஐந்தரை மாத காலத்தில், 400 மணி நேரம் வகுப்புகளும், 200 மணி நேரம் தேர்வு மற்றும் கலந்தாய்வும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வார, மாத இறுதியில் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இதுவரை 3 குழுவினருக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி விகிதம் 70%, 80%, 100% ஆக இருந்தது. கடந்த 2016 டிசம்பர் தேர்வில், லிம்ரா மாணவரான டாக்டர் செராபிம் தேசிய அளவில் 5-வது இடமும், டாக்டர் திவ்யா 14-வது இடமும் பிடித்து தேர்ச்சி பெற்றனர்.

தமிழகத்தில் இதற்கான பயிற்சி வகுப்புகளை லிம்ரா மட்டுமே நடத்துகிறது. பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இப்பயிற்சியை பிலிப்பைன்ஸில் லிம்ரா வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு ‘லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ், எண்: 177, ராயப்பேட்டைநெடுஞ்சாலை, எஸ்எம்எஸ் சென்டர், முதல்மாடி, மயிலாப்பூர், சென்னை-600004’ என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 9444615363, 9444276829, 9445483333, 9445783333.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x