Published : 06 Jul 2017 09:40 AM
Last Updated : 06 Jul 2017 09:40 AM

ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த வேண்டும் என செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்தால் முன்பெல்லாம் பல நாட்கள், மாதங்கள் காத்திருக்க வேண்டும். இதனால் மின் நுகர்வோர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாயினர். இதையடுத்து, மின்நுகர்வோர்களின் வசதிக்காக தமிழ்நாடு மின்வாரியம் மின் இணைப்புக் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரே நாளில் மின்இணைப்பு வழங்கும் திட்டத்தை அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, இத்திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.

இந்நிலையில், இத்திட்டம் குறித்த தகவல் பொதுமக்களிடம் சரியாக சென்று சேரவில்லை. இதனால், இத்திட்டத்தின்கீழ் புதிய மின் இணைப்புக்கோரி குறைவான விண்ணப்பங்களே மின்வாரிய அலுவலகங்களுக்கு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இத்திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிகளவில் விளம்பரப் படுத்த வேண்டும் என செயற் பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தினமும் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை சம்மந்தப் பட்ட செயற்பொறியாளர்கள், மின்வாரிய தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட் டத்தை சுணக்கம் இன்றி செயல்படுத்த வேண்டும். சுணக்கம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை செயற்பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் ஏற்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x