Published : 16 Jul 2017 10:47 AM
Last Updated : 16 Jul 2017 10:47 AM

திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து வஸ்திர மரியாதை

திருமலை திருப்பதி வெங்கடாசல பதி கோயிலுக்கு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து ஆனிவார ஆஸ்தான வஸ்திர மரியாதை நேற்று அனுப்பி வைக் கப்பட்டது.

மொகலாயர்கள் படையெடுப் பின்போது ஸ்ரீரங்கம் கோயில் உற்சவரான நம்பெருமாள் சிலை 1320-ம் ஆண்டு முதல் 1360-ம் ஆண்டு வரை, சுமார் 40 ஆண்டுகள் திருமலை திருப்பதி கோயிலில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது. இதை நினைவுகூரும் வகையில், கைசிக ஏகாதசி நாளன்று திருப்பதி கோயிலில் இருந்து வஸ்திர மரி யாதை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அளிக்கப் படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருமலை திருப்பதி கோயிலுக்கு ஆனிவார ஆஸ்தான தினத்தன்று வஸ்திர மரியாதைகள் அனுப்பி வைக்கப் படும். இந்த ஆண்டு ஆனிவார ஆஸ்தான தினம் ஜூலை 17-ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வஸ்திர மரியாதைகள் திருப்பதிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீரங்க விலாச மண்டபத்தில் வஸ்திரங் கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை களுக்கு பின், கோயில் யானை மீது தட்டுகளை வைத்து ரங்கா ரங்கா கோபுரம் வரை எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து திருப் பதிக்கு கார் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பொ.ஜெயராமன், அறங்காவலர்கள் டாக்டர் சீனிவாசன், ரங்காச்சாரி, கவிதா ஜெகதீசன் மற்றும் கோயில் அர்ச்சகர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x