Published : 13 Jul 2017 08:40 AM
Last Updated : 13 Jul 2017 08:40 AM

நீதிபரிபாலனம் வழங்குவதிலும் 125 ஆண்டு பாரம்பரியம் கொண்டது சென்னை உயர் நீதிமன்றம்: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பெருமிதம்

125 ஆண்டுகால பாரம்பரியம் சென்னை உயர் நீதிமன்ற கட்டிடங்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கு தடையின்றி நீதி பரிபாலனத்தை வழங்கிக் கொண்டிருக்கும் உயர் நீதிமன்றத்துக்கும் உள்ளது என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.

இலட்சினை வெளியீடு

சென்னை உயர் நீதிமன்றம் 125 ஆண்டு கால பாரம்பரியம் மிக்கது. இதன் கட்டிடம் ஹென்றி இர்வின் என்ற பொறியாளரின் வழிகாட்டுதல்படி 1892-ல் கட்டப்பட்டது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தியாவில் நிறுவப்பட்ட 3 உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றமும் ஒன்று. விக்டோரியா மகாராணியின் காப்புரிமைப்படி நிறுவப்பட்ட உயர் நீதிமன்றம் என்பதால் பல்வேறு சிறப்பு அதிகாரங்களும் இந்த உயர் நீதிமன்றத்துக்கு உள்ளது. வரலாற்று சிறப்புகளை தன்னகத்தே கொண்ட இந்த உயர் நீதிமன்றத்தின் பாரம்பரிய கட்டிடத்தை நினைவுகூறும் வகையில் 125-ம் ஆண்டு நினைவு இலட்சினை நேற்று வெளியிடப்பட்டது.

இந்த இலட்சினையை வெளியிட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:

125 ஆண்டு கால பாரம்பரியம் இந்த உயர் நீதிமன்றத்தின் கட்டிடங்களுக்கு மட்டும் கிடையாது. இங்கு நீதி கேட்டு வரும் பொதுமக்களுக்கு நீதிபரிபாலனத்தை தடையின்றி வழங்கிக்கொண்டிருக்கும் உயர் நீதிமன்றத்துக்கும் அந்த பாரம்பரியம் உள் ளது. இங்கு பல்வேறு சிறப்பு மிகுந்த வழக் கறிஞர்கள், நீதிபதிகள் பணியாற்றியுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்பு

அத்தகைய சிறப்பு வாய்ந்த உயர் நீதிமன்றத்தில் நான் தலைமை நீதிபதியாக பணியாற்றுவதையும், இந்த 125-ம் ஆண்டு நினைவு இலட்சினையை நான் வெளியிடுவதையும் பெருமையாக கருது கிறேன். இந்த பாரம்பரியத்தை, பெருமையை போற்றிப் பாதுகாப்பதில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது. எனவே வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த உயர் நீதிமன்றத்தின் மாண்பை காப்பாற்ற அனைவரும் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், டி.எஸ்.சிவஞானம், எஸ்.மணிக் குமார், கே.கே.சசிதரன், ஆர்.சுப்பையா, எம்.சத்யநாராயணன். என்.கிருபாகரன், எம். துரை சாமி, எஸ்.விமலா, எஸ்.வைத்தியநாதன், எம்.வி.முரளிதரன், எம்.கோவிந்தராஜ் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x