Published : 11 Jul 2017 09:19 AM
Last Updated : 11 Jul 2017 09:19 AM

கடும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான ஓபிஎஸ் உறவினர்களின் கிணற்றை முற்றுகையிட்ட லட்சுமிபுரம் கிராம மக்கள்: தேனி அருகே பெண்கள் உட்பட 243 பேர் கைது

தேனி அருகே முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர்களின் நிலத்தில் தோண்டப்பட்ட கிணற்றால், கிராமத் தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பிரச்சினைக்குரிய கிணற்றை முற்றுகையிட்ட கிராம மக்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத் தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்குள்ள சமுதாயக் கிணற்றில் இருந்து பொதுமக்கள் குடிநீர் பெறு கின்றனர். இந்நிலையில், இந்த கிரா மத்தின் அருகேயுள்ள தோட்டத்தில் அளவுக்கு அதிகமான ஆழத்தில் தோண்டப்பட்ட கிணறுகளால் கிராம சமுதாயக் கிணற்றில் தண்ணீர் வற்றிப்போனதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பிட்ட தோட்டங்களின் பெரும்பகுதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சொந்த மானது. இவர்களிடம் கிராமத்தினர் பேச்சு நடத்தி, தண்ணீர் கிடைக்க உதவும்படி கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத் திடமும் முறையிட்டனர். ஆனால், கோரிக்கை நிறைவேறாததால் கடந்த 22-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தோட்டத்தில் மேலும் ஒரு கிணறு தோண்டப்படு வதாக தகவல் பரவியதால், லட்சுமி புரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் நேற்று தோட்டத்தில் உள்ள கிணற்றை முற்றுகையிட சென் றனர். தகவலறிந்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டனர். பெண்கள், மாணவர்கள் உட்பட 500-க்கும் அதிகமானோர் தனியார் தோட்டத்து கிணற்றைச் சுற்றி அமர்ந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, போலீஸார் மக்களை அங்கிருந்து வெளி யேறும்படி எச்சரித்தனர். அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 243 பேரை தென்கரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவத்தை கண்டித்து லட்சுமிபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கிராமத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக லட்சுமிபுரம் கிராம கமிட்டி தலைவர் கார்த்தி கூறியதாவது: எங்கள் கிராமத் தின் அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் கள் மற்றும் நண்பர்களுக்கு ஏராளமான ஏக்கரில் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் தோண்டப்பட்ட கிணறுகளால்தான், எங்கள் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிணற் றில் இருந்து எந்நேரமும் அதிக தண்ணீரை உறிஞ்சி எடுத்து விடுகின்றனர். தோட்டத்து கிணற்று தண்ணீரை கொடுத்து, கிராமத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்கும் படி கேட்டுள்ளோம். இப்பிரச்சினை தீரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் நேற்று மாலையில் விடுவித்தனர். எனினும், மக்கள் கிராமத்து மந்தையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கள் கூறியதாவது: தனியார் தோட் டத்தில் கிணறு தோண்டியவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரியவில்லை. சமாதானமாகப் பேசி பிரச் சினையை முடித்துக் கொள் ளும்படி அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x