Published : 21 Jul 2017 09:46 AM
Last Updated : 21 Jul 2017 09:46 AM

கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்த மேலும் 2 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கொடுங்கையூர் தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஏகராஜைத் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்தனர். இவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் மீனாம்பாள் சாலை மற்றும் சிட்கோ நகர் பிரதான சந்திப்பில் செயல்பட்டு வந்த உணவகத்தில் கடந்த 15-ம் தேதி நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.

உயர் சிகிச்சை

தீயை அணைக்கும் பணி யில் தீயணைப்பு வீரர்கள் ஈடு பட்டிருந்தபோது காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு வீரர்கள், வேடிக்கை பார்த்த பொதுமக்கள் என 48 பேர் படுகாயம் அடைந்தனர். தீக் காயம் அடைந்தவர்கள் கீழ்ப்பாக் கம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

அவர்களுக்கு சிறப்பு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப் பினும் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிறு அதிகாலை தீயணைப்பு வீரர் ஏகராஜ் (56) உயிரிழந்தார்.

இந்நிலையில், மிகவும் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொடுங்கையூர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த பரமானந்தன் (67) நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இவர் துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். அதேபோல், கண்ணதாசன் நகரைச் சேர்ந்த அபிமன்யூ (40) என்பவரும் சிகிச்சை பலனின்றி நேற்று அதி காலை இறந்தார்.

14 பேர் கவலைக்கிடம்

இதையடுத்து, கொடுங்கையூர் தீ விபத்தில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இந்த தீவிபத்தில் சிக்கிய மேலும் 14 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த 2 பேரது குடும்பத் துக்கும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x