Published : 15 Apr 2014 10:50 AM
Last Updated : 15 Apr 2014 10:50 AM

கொழும்புவில் மே 12,13 தேதிகளில் இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை: மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம்

இலங்கை மற்றும் தமிழக மீனவர் களுக்கிடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை மே 12, 13 தேதிகளில், கொழும்புவில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறி மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையிலான முதல் கட்டப் பேச்சுவார்த்தை, சென்னையில் கடந்த ஜனவரி 27-ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை மார்ச் 13-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்காததைச் சுட்டிக்காட்டி, பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் மார்ச் 25-ந் தேதி பேச்சு வார்த்தையை நடத்தலாம் என்றும் திட்டமிடப்பட்டது. ஆயினும், அந்த தேதியில் கூட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், தமிழக மீன்வளத் துறை செயலாளர் டாக்டர் எஸ்.விஜயகுமார், மத்திய வெளி விவகாரத் துறை இணைச் செயலாளர் சுசித்ரா தேவிக்கு திங்கள்கிழமை ஒரு கடிதம் எழுதி யுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதா வது: இருநாட்டு மீனவர் பேச்சு வார்த்தை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பரில் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 27-ம் தேதி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 11-ம் தேதி, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால், நாங்கள் கேட்டுக் கொண்டபடி தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை.

அதன்பிறகு, தமிழகத்துக்கு மத்திய துணைச் செயலாளர் எழுதியிருக்கும் கடிதத்தில், வரும் மே 12 மற்றும் 13 தேதிகளில் இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை கொழும்பு வில் நடத்த இலங்கை தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். எனவே, தமிழகம் தரப்பிலும் பங்கேற்க தயாராக இருப்பதாக இலங்கை அரசுக்கு தகவல் தெரிவித்துவிடவும்.

தமிழகம் சார்பில் முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிரதிநிதிகளே இதிலும் கலந்து கொள்வார்கள். அதன் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக தங்களுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதப்பட் டுள்ளது.

அந்த பிரதிநிதிகளு டன், தமிழக மீன்வளத் துறை செயலாளர், மீன்வளத் துறை இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர் ஆகியோர் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x