Published : 30 Jul 2017 09:40 AM
Last Updated : 30 Jul 2017 09:40 AM

2 வாரமாக தண்ணீர் வரவில்லை: சென்னை மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் 2 வாரமாக தண்ணீர் வராததால் அவதிக்குள்ளான பட்டமேற்படிப்பு மாணவர்கள் அரசு பொது மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான தங்கும் விடுதி கல்லூரி வளாகத் தில் உள்ளது. பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் 250 பேர் விடுதியில் தங்கியுள்ளனர். கடந்த 2 வாரமாக விடுதியில் தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று அரசு பொது மருத்துவமனையில் டவர் பிளாஸ் கட்டிடம்-1 முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய மாணவர்களின் போராட்டம் 10.30 மணி வரை நீடித்தது.

மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை கைவிடு மாறு கேட்டுக் கொண்டார். எழுத் துப்பூர்வமாக உறுதி மொழி அளித்தால் மட்டுமே ஆர்ப்பாட் டத்தை கைவிடுவோம். இல்லை யென்றால் ஆர்ப்பாட்டம் தொட ரும் என்று மாணவர்கள் தெரிவித் தனர். இதையடுத்து நாராயணசாமி பொதுப்பணித் துறை அதிகாரிக ளுடன் கலந்து பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினர். இதனால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாணவர்களிடம் கேட்டபோது, “பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தண்ணீர் வராமல் எப்படி நல்ல முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதேபோல் பட்டமேற்படிப்பு மாணவிகள் விடுதி, இளநிலை மருத்துவ மாணவ, மாணவிகள் விடுதியிலும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதனையும் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுதொடர்பாக அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமியிடம் கேட்டபோது, “விடுதியில் தண்ணீர் வருவதற்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. தற்போது விடுதியில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x