Published : 04 Jul 2017 09:50 AM
Last Updated : 04 Jul 2017 09:50 AM

ஏலகிரியில் காவல்துறை வாகனத்தில் தேக்கு மரம் கடத்திய 2 காவலர்கள் கைது: வனத்துறையினர் ரோந்தின்போது பிடிபட்டனர்

ஏலகிரி காப்புக் காட்டுப் பகுதியில் தேக்கு மரங்களை வெட்டி காவல் துறைக்குச் சொந்தமான வாக னத்தில் கடத்த முயன்றதாக, 2 காவலர்களை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காவல்துறை வாகனம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான தேக்கு மரங்களைப் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி காப்புக் காட்டுப் பகுதியில் சந்தனம், செம்மரம், தேக்கு, வேம்பு, பலா உள்ளிட்ட மரங்கள் வனத்துறை சார்பில் வளர்க்கப்படுகின்றன. இரவு நேரங் களில் மலைக்கு வரும் மர்ம நபர் கள் மரங்களை வெட்டி வாகனங் களில் கடத்திச் செல்வதாக திருப்பத் தூர் வனப் பாதுகாவலர் முகமது ரபீக்கிடம் ஏலகிரியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, ஏலகிரி மலைப் பகுதியில் வனத்துறையினர் கடந்த ஒரு வாரமாக ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், ஏலகிரி மலையில் உள்ள நாகானூத்து காப்புக் காட்டில் இரவு நேரத்தில் பெரிய வேன் ஒன்று தினமும் வந்துவிட்டு செல்வதைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறையின ருக்கு நேற்று முன்தினம் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, வனப் பாதுகாவலர் முகமது ரபீக் தலைமையில், வனச் சரகர் பரமசிவம், வனக் காப்பாளர்கள் பரந்தாமன், வெங்கடேசன் மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, காவல் துறைக்குச் சொந்த மான வேன் ஒன்றில், 2 பேர் தேக்கு மரங்களை வெட்டி ஏற்றிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

கிடுக்கிப்பிடி விசாரணை

அவர்களைப் பிடித்து விசா ரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். பின்னர், இருவரையும் திருப்பத்தூர் வனக் கோட்ட அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், பிடிபட்ட இரு வரும் ஏலகிரி மலை நிலா வூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (28), தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பி துரை (27) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள 7-வது பட்டா லியன் பிரிவில் காவலர்களாகப் பணியாற்றி வருவது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக் குப் பதிவு செய்த வனத்துறை யினர், தேக்கு மரங்களை வெட்டிக் கடத்தியதாக வேல்முருகன், தம்பிதுரை ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காவல் துறைக்குச் சொந்தமான வேன் ஒன்றும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள தேக்கு மரங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x