Published : 07 Jun 2017 09:28 AM
Last Updated : 07 Jun 2017 09:28 AM

பெரும்பாலான துறைகளில் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான ஜிஎஸ்டி வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவு:இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வரவேற்பு

பெரும்பாலான துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு நியாயமான ஜிஎஸ்டி வரி விதிக்க கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசு. முடிவு செய்ததை இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வரவேற் றுள்ளது.

இதுகுறித்து, இந்திய ஏற்றுமதி மே ம்பாட்டு ஆணையத்தின் (பியோ) தென் மண்டல தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள் ளதாவது:

பெரும்பாலான துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு நியாயமான ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இதை ஏற்று மத்திய நிதியமைச்சர் ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளார். விரைவாக அவர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜவுளித் துணி, இயற்கை இழைகள் மற்றும் ஆடைகளுக்கு குறைந்த அளவு ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது இதன் மூலம், அனைத்துத் துறைகளிலும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப் பதோடு, ஏற்றுமதியும் அதிகரிக்கும். அத்துடன் வேலை வாய்ப்பும் பெருகும். இந்திய ஜவுளித்துறை உற்பத்தி தற்போது 120 மில்லியன் டாலராக உள்ளது. இத்துறையில் மேலும் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 230 பில்லியன் டாலராக உயரும். இதன் மூலம், ஏற்றுமதிக்கான பைபர், நூலிழை உள்ளிட்டவை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றப்படும்.

மேலும், தொழில்துறையை மேம்படுத்த இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்த சில யோசனைகளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வர் மற்றும் நிதியமைச் சருக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு சக்தி வேல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x