Published : 18 Jul 2016 09:30 AM
Last Updated : 18 Jul 2016 09:30 AM

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தோல்வி அடைந்ததாக அறிவித்தால் பெரிய கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளது: ராமதாஸ் கணிப்பு

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தோல்வி அடைந்த தாக அறிவித்தால் பெரிய கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

பாமகவின் 14-வது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவல கத்தில் நேற்று நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட, கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

செய்தியாளர்களின் கேள்வி களுக்கு ராமதாஸ் அளித்த பதில்கள்:

தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பாக, நாங்கள் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடுவோம். இந்த ஆண்டு சற்று தாமதமாகிவிட்டது. அதிமுக, திமுக ஆட்சியில் இருக்கும்போது, எங்களுடைய நிழல் நிதிநிலை அறிக்கையில் சிலவற்றை பயன் படுத்தியிருக்கிறார்கள்.

அமைச்சர்கள், அரசு அதிகாரி களுக்கு நிழல் நிதிநிலை அறிக்கையை கொடுப்போம். பனை மரம் என்பது ஒரு அதிசய மரம். பனை மரத்தில் இருந்து எத்தனையோ பொருட்களை தயாரிக்கலாம். தமிழகத்தில் இருந்த 50 கோடி பனை மரங்களில், தற்போது 5 கோடி பனை மரங்கள்தான் உள்ளன. பனை மரம் பாதுகாப்புக்கு சட்டம் கொண்டுவர வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எல்லோரும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். ஆளுங்கட்சியினர் சொல்வதைத்தான் அதிகாரிகள் கேட்பார்கள். அதனால் தேர்தல் எப்படி நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. வெற்றி பெற்றவர்களை தோல்வி அடைந்த தாக அறிவிக்கும்போது, பெரிய கலவரங்கள் தமிழகத்தில் நடப் பதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

நிழல் நிதிநிலை முக்கிய அம்சங்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத்துக்கு தேவை யான விதைகள், உரம், தண்ணீர், மின்சாரம் இலவசமாக வழங்கப் படும். ஊழலை ஒழிக்க திட்டங் கள் செயல்படுத்தப்படும். வெளிப் படியான நிர்வாகம் உறுதி செய்யப்படும். லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும். கடன் சுமை இல்லா தமிழகம் அமைக்க சிறப்புத் திட்டம் ஏற்படுத்தப்படும். சட்டம் ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படும். வறுமை ஒழிக்கப்படும். 12 லட்சம் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும். சென்னையில் பொதுப் போக்குவரத்து வலுப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x